டூப் போடாமல் தலைகீழாக ஹெலிகாப்டரில் தொங்கிய விஜயகாந்த்... பிரமிப்புடன் சொன்ன இயக்குனர்

By :  Sankaran
Update: 2024-12-29 14:30 GMT

விஜயகாந்த் படங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் தனக்கு டூப் எல்லாம் வேண்டாம் என்று சொல்வார். முடிந்த அளவுக்கு அவரே பல காட்சிகளை ரிஸ்க் எடுத்து செய்வார். இதுகுறித்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.ரமேஷ் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

'தாயகம்' என்ற படத்தை விஜயகாந்தை வைத்து எடுத்தார். இந்தப் படத்திற்காக இவர் இப்ராகிம் ராவுத்தரிடம் சென்று கதை சொல்லப் போனாராம். ரெண்டு விஷயம்தான் சொன்னாராம். கதை ஓகே ஆகிவிட்டதாம். அப்துல் கலாம் மாதிரி ஒரு விஞ்ஞானி, ஒரு மீனவன். இருவருக்கும் நட்பு. இவர் கொண்டு வரும் மீனை அவர் சாப்பிடுகிறார்.

இவ்ளோதான் கதை. நல்லா இருக்குடா. இந்த சென்டிமென்டை ஃபில் பண்ணிட்டு அப்புறமா வந்து சொல்லுன்னாரு. அப்படி வந்ததுதான் தாயகம். அப்போ விஜயகாந்த் 'என்னடா கதை சொல்லிட்டியா..'ன்னு கேட்டாரு. 'திட்டு விழுந்துதா..?'ன்னாரு. இல்ல. ஓகே வாயிடுச்சுன்னு சொன்னேன்.

'அப்படி என்னடா கதை..?ன்னு கேட்டப்போ அவரிடமும் சொன்னேன். 'என்னடா மீனவன் கத்தியைத் தூக்கிட்டு பாகிஸ்தான் போறானா? என்னடா கதை சொல்றே..'ன்னாரு. அப்ப தான் அந்த டயலாக். 'இந்த மீனு ஆத்துலயும் நீந்தும். கடல்லயும் நீந்தும்'னு ஒரு டயலாக் சொல்றாரு. ஆத்து மீனு கடல்ல நீந்தாது. கடல் மீன் ஆத்துல நீந்தாது. அப்படின்னு ஒண்ணு இருக்கு. அதை வந்து இவரு மாத்தி சொல்வாரு.


கருப்பு நிலா படத்துல ஒரு ஹெலிகாப்டர் பைட் சீன்ல கேப்டன் தலைகீழா தொங்கினாரு. வேணாம் கேப்டன். 'அதெல்லாம் டூப் பண்ணலாம்'னு சொன்னப்ப 'நான் தான் பண்ணுவேன்'னாரு. அந்த ஹெலிகாப்டருக்கு அந்தக் கால்ல ஒரு கல்லைக் கட்டி பேலன்ஸ் பண்ணினாரு.

இவ்வளவுக்கும் அந்த பைலட்டுக்குத் தமிழ் தெரியாது. 'டேய் கீழே இறக்குடா'ன்னு சொன்னாலும் அவனுக்கு என்னன்னு தெரியாது. இப்படிப்பட்ட டேஞ்சரான நிலையிலும் அவர் ஜாலியா அதுல தொங்கிக்கிட்டு சண்டை போட்டு திருப்பிக் கொண்டு வந்ததும் இறங்கினாரு. அப்புறம் அடுத்த படம் நம்ம கம்பெனில நீதான்டா பண்றன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருப்பு நிலா படத்தில் ஹெலிகாப்டர்ல தொங்கியபடி சண்டையிடும் காட்சியில் விஜயகாந்த் டூப் இல்லாமல் நடித்தார். அப்போது அவர் ஒத்த கையில பேலன்ஸ் பண்ணிட்டு தொங்கிட்டு வந்தாரு. இடுப்புல இருந்து ஒரு சின்ன கயிறும் கட்டியிருக்காங்க என்கிறார் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ்.

1996ல் ஏ.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் தாயகம். தேவா இசை அமைத்துள்ளார். விஜயகாந்துடன் இணைந்து அருண்பாண்டியன், ரஞ்சிதா, நெப்போலியன், கசான்கான், மன்சூர்அலிகான், விவேக், தியாகு உள்பட பலர் நடித்துள்ளனர். 

1995ல் ஆர்.அரவிந்தராஜ் இயக்கிய படம் கருப்புநிலா. தேவாவின் இசையில் படம் பிரமாதமாக இருந்தது. விஜயகாந்துடன், குஷ்பு, ரஞ்சிதா, எஸ்எஸ்.சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது இப்ராகிம் ராவுத்தர் தயாரித்த படம்.

Tags:    

Similar News