விஜயகாந்த் படத்தில் கலைஞர் சொன்ன கரெக்ஷன்! முடியாது என மறுத்த இயக்குனர்
விஜயகாந்த்:
விஜயகாந்த் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி அந்த படத்தில் ஒரு சின்ன கரெக்ஷன் இருப்பதாக கூற இப்போதைக்கு அதை பண்ண முடியாது என சொல்லி மறுத்திருக்கிறார் இயக்குனர். அந்த ஒரு சம்பவம் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றது. அது வேறு யாருமில்லை. இயக்குனர் விக்ரமன். விக்ரமனை பொறுத்தவரைக்கும் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.
விக்ரமன் இயக்கிய பெரும்பாலான படங்களையும் கலைஞர் கருணாநிதிக்கு அவர் முதலமைச்சராக இருக்கும்போது போட்டு காண்பித்திருக்கிறாராம்.. அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு கருணாநிதி விக்ரமனை பாராட்டவும் செய்து இருக்கிறாராம். அவருடைய ஆட்சி கவிழ்ந்து புதிய ஆட்சி உருவான நேரத்தில் அதிலிருந்து விக்ரமன் படங்களை கருணாநிதி பார்த்ததே இல்லையாம்.
ஆட்சியில் இல்லைனு கூப்பிடலையா?:
இதைக் கூட ஒரு மேடையில் விக்ரமனை பார்க்கும்போது கருணாநிதி ‘ இப்பொழுது நான் ஆட்சியில் இல்லாததால் தான் படத்தை போட்டு காட்ட வில்லையோ’ என கிண்டலாக கேட்டாராம் கருணாநிதி. ஒரு சமயம் வானத்தைப்போல திரைப்படத்தின் முதல் நாள் ஷோவை கருணாநிதிக்கு போட்டு காண்பித்திருக்கிறார் விக்ரமன். மறுநாள் ரிலீஸ். முதல் நாள் படத்தை பார்த்த கருணாநிதி படத்தில் ஒரு சின்ன கரெக்ஷனை சொல்லி இருக்கிறார்.
அதற்கு விக்ரமன் இப்போதைக்கு எந்த கரெக்ஷனும் பண்ண முடியாது தலைவரே என கூற கருணாநிதி சரி பார்த்துக்கோ என சொல்லிவிட்டு சென்றாராம். அதன் பிறகு படம் ரிலீஸ் ஆகி மூன்று நாள் கழித்து அதிகாலையில் விக்ரமனுக்கு போன் செய்து படம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் சந்தோஷமாக இருக்கிறது எனக் கூறினாராம்.
திருட்டை விரட்டிய கலைஞர்:
பின் விக்ரமன் கருணாநிதியிடம் சில இடங்களில் படம் திருட்டு நடக்கிறது. அதை மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க தலைவரே என்று கூறியிருக்கிறார். அதற்கு கருணாநிதி ‘என் ஆட்சியில் சினிமாவிற்கு நல்லதுதான் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் ஏதாவது குறைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்’ என கூறியதோடு திருட்டு நடக்காதவாறும் கண்ட்ரோல் செய்தாராம் கருணாநிதி.