வடிவேலுவை பத்தி கவுண்டமணி அப்பவே சொன்னாரு.. ஆனா நடந்தது என்ன தெரியுமா?

By :  Rohini
Update:2025-02-19 19:13 IST

வடிவேலுவை நடிக்க வைத்த காரணம்: ஒரு கட்டத்திற்கு மேலாக ஒரே ஹீரோ பல படங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். அதைப்போல தான் கவுண்டமணி செந்தில் காமெடியில் எந்த ஒரு தொய்வும் இல்லாத நிலையிலும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இவர்களுக்கு பதிலாக வேறு யாரையாவது புது முகங்களை வைத்து காமெடியை ட்ரை பண்ணலாமே என எண்ணுவது உண்டு. ஆனால் இது நாள் வரைக்கும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக்கு இன்றுவரை ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி இருந்தும் புது முகங்களை வைத்து நகைச்சுவையில் புதுமையை கொண்டு வரலாம் என முடிவெடுத்தவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான வி சேகர் .

ஆரம்பத்தில் கவுண்டமணி செந்திலை வைத்து படங்களை எடுத்த வி சேகர் புதுசா இருக்கட்டுமே என வடிவேலுவை வைத்து காமெடியை ட்ரை பண்ணினார். ரசிகர்களுக்கும் அது ஒரு வித்தியாசமாக இருக்கும். கவுண்டமணி செந்திலை விட வடிவேலு என்ன செய்யப் போகிறார் காமெடியில் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். அதன் அடிப்படையில் தான் வடிவேலுவை முதலில் தன் படத்தில் காமெடியனாக போட்டார் வி சேகர். இவர் படத்தில் நடிப்பதற்கு முன் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார் வடிவேலு. அதன் பிறகு தான் தேவர் மகன் படம் வெளியாகி வடிவேலுவின் முகம் பலருக்கும் தெரிய ஆரம்பித்தது.

வடிவேலுவுக்கு பிறகு விவேக்: வடிவேலுவை வைத்து அடுத்ததாக விவேக்கையும் உள்ளே கொண்டு வந்தார் வி சேகர். அதுவும் தேவர் மகன் படத்தில் நடித்த பிறகு வி சேகரை பார்த்து நான் தேவர் மகன் படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தை பாருங்கள். நன்றாக இருக்கும் .அந்த படத்தை பார்த்து எனக்கு நீங்கள் வாய்ப்பு கொடுப்பீர்கள் என வடிவேலு ஏற்கனவே சொல்லி இருந்தாராம். அதன் பிறகு தான் வி சேகர் தேவர் மகன் படத்தை பார்த்து இருக்கிறார். அதன் பிறகு தான் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற படத்தில் கவுண்டமணி காம்பினேஷனில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் வி சேகர்.

ஆனால் அந்த படத்தில் நடிக்கும் பொழுது கவுண்டமணி வடிவேலுவை பற்றி ‘இவனுக்கு சின்சியாரிட்டி பத்தாது. பொறுப்பா நடிக்க மாட்டான் .ஏற்கனவே உங்களுடைய குரூப்பில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்களே. அவர்களை வைத்து இந்த படத்தில் நடிக்க வைக்கலாமே’ என கேட்டாராம் கவுண்டமணி. அதற்கு வி சேகர் ‘இல்ல சார் கொஞ்சம் யூத்தா இருந்தால் நன்றாக இருக்கும்’ என சொல்ல அதற்கு கவுண்டமணி ஏன் எனக்கு என்ன அவ்வளவு வயசாகி இருச்சா என கேட்டாராம் .வடிவேலு அந்த படத்தில் நடித்த பிறகுதான் வி சேகரின் படங்கள் பெரிய ரேஞ்சுக்கு போக ஆரம்பித்ததாம்.

தெரு நாய் மாதிரி: வடிவேலுவை பற்றி வி சேகர் மேலும் கூறும்போது நடிப்பை இவர் நாடகங்களில் கற்றுக் கொள்ளவில்லை .கற்றுக் கொள்வதில் இரண்டு முறை இருக்கிறது. கவுண்டமணி போன்ற ஆட்கள் எல்லாம் நாடகங்களில் முறையாக பயிற்சி பெற்று நடிக்க வந்தவர்கள். ஆனால் வடிவேலு தெரு நாய் மாதிரி. மதுரையில் நண்பர்களுடன் ஆங்காங்கே திரிந்து தெருக்களில் உட்கார்ந்து நாட்டு நடப்புகளை எல்லாம் பேசிக்கொண்டு சினிமாவை பார்த்து அதில் இருக்கும் விஷயங்கள் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் தன் நண்பர்களுடன் காமெடியாக பேசி பேசி அதன் மூலம் அறிவை வளர்த்தவர் வடிவேலு.

இன்ஸ்டியூட்டில் படிக்காமல் நண்பர்களுடன் ஜாலியாக பேசிப் பேசி தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்வது என்ற ஒரு முறை இருக்கிறது அல்லவா. அப்படிப்பட்டவர் தான் வடிவேலு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் வடிவேலு. கவுண்டமணிக்கும் வடிவேலுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவெனில் கவுண்டமணி வாழ்க்கையில் பல அனுபவங்கள் உண்டு. யார் கிட்ட எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், யாருக்கிட்ட எப்படி நடந்து கொள்ள வேண்டும், எங்கு எதை பேசணும், பேசக்கூடாது,சினிமா என்பது ஏற்றத்தாழ்வு நிறைந்தது.

அவர் நிறைய ஏற்றத்தாழ்வுகளை வெற்றி தோல்விகளை பார்த்திருக்கிறார். கதாநாயகனாக நடித்திருக்கிறார் என எல்லாமே பார்த்தவர் கவுண்டமணி. ஆனால் வடிவேலு. கவுண்டமணியில் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர். நல்ல நடிகர். நேரடியாக வந்து, வந்த புதுதிலேயே உயரத்தை பார்த்தவர் வடிவேலு. வந்த முதல் படத்திலேயே ஜோடியாக சரளாவையும் போட்டு விட்டேன். அதற்கேற்ப நேரமும் அவருக்கு நன்றாக இருந்தது .இதனால் மிகக் குறுகிய காலத்தில் வசதியும் அதிகரிக்க பெரிய தொகையை சம்பளமாக கொடுக்கும் நிறுவனங்களை பார்த்து வடிவேலு போய்விட்டார் என வி சேகர் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News