ரஜினி ஃபிளாட்பாரத்தில் இருந்தார்!.. அவரை அப்படித்தான் கூப்பிடுவேன்!.. நடிகர் பகீர்!..
Rajinikanth: பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை செய்தவர் ரஜினி. நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு ஒரு நாடகத்தில் நடிக்க அதில் அவர் ஏற்ற துரியோதனன் வேஷம் அவருகு கைத்தட்டலை பெற்று தந்தது. அதைப்பார்த்த நண்பர் ஒருவர் ‘நீ சென்னை போய் சினிமாவில் நடி’ என சொன்னார். அப்போது சினிமாவில் நுழைய நடிப்பு பயிற்சி கல்லூரி ஒரு விசிட்டிங் கார்டாக இருந்தது.
எனவே, சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் சேர்ந்தார் ரஜினி. அதன்பின் பின் அவர் பாலச்சந்தாரின் அறிமுகம் பெற்று அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கினார். ரஜினி சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 50 வருடங்களில் அவருக்கு சினிமாவில் எவ்வளவோ நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
இதில் முக்கியமானவர் நடிகர் மோகன் பாபு. இருவருமே சினிமாவில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அப்போதெல்லாம் சினிமா இயங்கியது சென்னையில்தான். தெலுங்கு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில்தான் நடக்கும். என்.டி.ராமாராவின் பல படங்களின் படப்பிடிப்பு சென்னையில்தான் நடந்தது. எனவே, தெலுங்கு நடிகர்கள் பலரும் சென்னையில் வீடு வாங்கி குடியேறினார்கள்.
சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், என்.டி.ராமாராவ், மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் என பலருக்கும் சென்னையில் வீடு இருக்கிறது. ரஜினிக்கு நெருக்கமான நண்பராக இருப்பவர் மோகன்பாபு. ரஜினி எப்போது ஆந்திரா போனாலும் அவர் தங்குவது மோகன்பாபுவின் வீட்டில்தான். சமீபத்தில் கூட மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மன்ச்சு இயக்கி நடித்த கண்ணப்பா படத்தை ரஜினி பார்த்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மோகன்பாபு ‘மெட்ராஸ் பிளாட்பாரத்தில் இருந்தபோதே ரஜினியை எனக்கு தெரியும். ஒன்றுமே இல்லாத போதுதான் நான் ரஜினியை சந்தித்தேன். 50 வருட நட்பு எங்களுடையது. இப்போதும் கூட நான் ரஜினியை எப்போது பார்த்தாலும் ‘பிளடி தலைவா’ என்றுதான் கூப்பிடுவேன்’ என சொல்லியிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோது ரஜினி பிளாட்பாரத்திற்கு அருகே ஒரு சாதாரண வீட்டில் குடியிருந்தது குறிப்பிடத்தக்கது.