உண்மை ஒரு நாள் வெல்லும்.. லிங்கா படம் பற்றி ரஜினி சொன்ன விஷயம்
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றவையாக இருந்திருக்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முத்து ,படையப்பா போன்ற படங்களை குறிப்பிடலாம். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லிங்கா.
ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக இந்த படம் வெளியானது. படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் .இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து ஜெகபதி பாபு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். அதுபோக சந்தானம் ,கருணாகரன் போன்றவர்கள் துணை நடிகர்களாக நடித்திருந்தனர்.
படையப்பா படத்திற்குப் பிறகு ரஜினி மற்றும் ரவிக்குமார் மீண்டும் இணைந்த திரைப்படம் தான் லிங்கா. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று ரிலீசானது. தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு சண்டை காட்சிகள் இசை போன்றவைகளுக்காக கலமையான விமர்சனங்களை பெற்றது .
படத்தின் நீளம் கிளைமாக்ஸ் ஸ்கிரிப்ட் ஆகியவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் லிங்கா படத்தை பற்றி ரஜினி சொன்ன ஒரு விஷயம் இப்போது வைரலாகி வருகின்றது. இதை கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .லிங்கா படத்தை பற்றி ரஜினி கூறும் பொழுது எப்பொழுதுமே ‘188 கோடி வசூல் செய்த திரைப்படம் சார் லிங்கா ,எனக்கு மிகவும் பிடித்த படம். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை.
அவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் 188 கோடி வசூல் செய்த திரைப்படம். ஆனால் மற்றவர்கள் குறைவாக வசூல் செய்திருப்பதாக தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள்’ என ரஜினி சொல்வாராம். இதை அந்த பேட்டியில் கூறும்பொழுது உண்மை ஒருநாள் வெல்லும் என கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.