படம் பிளாஃப் ஆகும்னு பாக்யராஜ் செஞ்ச வேலை.. ஆனா படமோ சூப்பர் ஹிட்
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். இவருடைய திரைக்கதையில் எத்தனையோ படங்கள் ஹிட்டாகி இருக்கின்றன. இயக்குனராக பணிபுரிந்த படங்களும் ஹிட் ஆகி இருக்கின்றன .ஹீரோவாக நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன .இப்படி எல்லா துறைகளிலும் பேர் வாங்கியவர் பாக்கியராஜ். திரைக்கதையில் இவரை மிஞ்சிய ஆள் வேறு யாரும் கிடையாது.
இந்திய அளவில் பெயரெடுத்தவர் பாக்கியராஜ். இவர் இயக்கி ஹீரோவாக நடித்த ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் இந்த படம் கண்டிப்பாக பிளாப் ஆக போகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தாராம் பாக்யராஜ். அது எந்த படம், எதனால் அப்படி நினைத்தார் என்பதை பற்றி அவருடன் உதவி இயக்குனராக இருந்தவரும் நடிகருமான ஜி வி குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் .இதோ அவர் கூறியது .
தூறல் நின்னு போச்சு படம்தான். ஏனெனில் அந்தப் படத்தில் பாக்யராஜின் கேரக்டரே மாறிப் போய்விட்டது. ஒரு காமெடி ஸ்கிரிப்ட் கிடையாது. மிகவும் சீரியஸாக கொண்டு போனார். அந்தப் படத்தில் கிளைமாக்ஸில் செந்தாமரையை தேவையில்லாமல் கொன்றது. படத்தில் டைரக்டர் மற்றும் நடிகராக இருந்த பாக்கியராஜ் அல்லது சுலக்சனா இருவர்களில் யாராவது ஒருத்தர்தான் இறந்திருக்க வேண்டும்.
என்னடா சரியாவே வரலையே என நினைத்துக் கொண்டு இருந்தோம். அன்று ஏவிஎம்மில் ஒரு தியேட்டரில் ப்ரொஜக்ஷன் போட்டிருந்தார்கள். உடனே பாக்கியராஜ் எனக்கு உடம்பு சரியில்லை என சொல்லிவிடு. நான் வரமாட்டேன் என சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் ,பாண்டியராஜன் ,லிவிங்ஸ்டன் ஆகியோர்தான் ப்ரொஜக்ஷன் பார்க்க போயிருந்தோம் .இந்த படத்தின் விவாதத்தின் போது காமெடியே வொர்க் அவுட் ஆகவில்லை .
ஆனால் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் அனைவருமே பார்த்து சிரித்து விட்டார்கள். இடைவெளியின் போது பாண்டியராஜன் பாக்கியராஜுக்கு போன் செய்து ‘சார், என்ன சார் இப்படி சிரிச்சுகிட்டு இருக்காங்க’ என சொல்ல உடனே பாக்கியராஜ் சரி நான் அடுத்த காட்சிக்கு வந்து விடுகிறேன் என பாண்டியராஜனிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டார். இப்படி சொன்னதுமே பாக்யராஜுக்கு உண்டான பயம் தெளிந்து விட்டது.
பாக்யராஜ் இந்த படத்தை பற்றி சொல்லும் பொழுது இந்த படம் ஓடவே ஓடாது. கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள். இது பிளாப் ஆகப்போகுதுன்னு சொன்னாரு. ஆனால் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது .பாக்யராஜுக்கு எதனால் இந்த சந்தேகம் வந்தது எனில் அவர் நினைத்த ஸ்கிரிப்ட் வேறு. எடுத்த ஸ்க்ரிப்ட் வேறு .படத்தை மிகவும் சீரியஸாக கொண்டு போய்விட்டார். அதனால் தான் படம் கண்டிப்பாக பிளாப் ஆகப் போகுது அப்படின்னு நினைத்து விட்டார். ஆனால் படமோ சூப்பர் ஹிட் என ஜிவி குமார் கூறினார்.