அகலகால் வச்சு மாட்டிக் கிட்ட சிவகார்த்திகேயன்.. யாரும் தள்ளிவிடல.. இதுதான் காரணமா?
சிவகார்த்திகேயன் அடுத்த தளபதியா?: தமிழ் சினிமாவில் அஜித் விஜய் இவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுவும் அடுத்த தளபதி இவர்தான் என்ற அளவுக்கு ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஜால்ரா தட்டி வருகிறார்கள். ஆனால் யாரும் விஜயாக முடியாது. 50 கோடி 200 கோடி வாங்கினாலும் விஜயாக மாறிவிட முடியாது என ஷாம் ஒரு பேட்டியில் சரியாக சொல்லியிருந்தார் .ரஜினி கமல் விஜய் அஜித் இவ்வளவுதான் மாஸ். அடுத்து இவர்களுக்கு இணையாக யாரும் அந்த அளவுக்கு போட்டி போடும் நடிகர்கள் இல்லை என்றும் ஷாம் ஒரு பேட்டியில் கூறினார்.
கதறி அழுத சிவகார்த்திகேயன்: ஆனாலும் ஒரு சில பேர் சிவகார்த்திகேயனை விஜயின் இடத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன் ஒரு மேடையில் என்னை எவ்வளவு அடிக்கணுமோ அடிக்கிறாங்க என்றவாறு பேசியிருந்தார். அப்படி அவர் பேசியது சிவகார்த்திகேயனை நமக்கு ஞாபகப்படுத்தியது. ரெமோ நேரத்தில் சிவகார்த்திகேயன் மேடையில் கண்ணீர் விட்டு அழுததை யாரும் மறக்க முடியாது. அது அப்போதைய நேரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி இருந்தது.
பப்ளிசிட்டிக்காக பண்ணியதா?: ஆனால் அப்படி பேசி தான் தனக்கான ஒரு பப்ளிசிட்டியை சிவகார்த்திகேயன் தேடிக்கொண்டார். அதனால் அதேபோல ஒரு ஃபார்முலாவை தான் பிரதீப் ரங்கநாதனும் இப்பொழுது கையில் எடுத்திருக்கிறாரோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்து வருகிறது .ஆனால் ரெமோ நேரத்தில் அவர் செய்த தவறுதான் அந்த கண்ணீருக்கு காரணம் என வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். பினாமி பெயரில் சொந்தமாக ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தார் சிவகார்த்திகேயன். ரெமோ படமும் அப்படித்தான் எடுத்தார் .அவருடைய நண்பர் ஆர்டி ராஜா பெயரில் அந்தப் படத்தை எடுத்தார் .
வட்டி கொடுக்க முடியாமல் திணறிய எஸ்கே:அதற்காக பைனான்சியரிடம் இவரே கையெழுத்து போட்டு தான் கடன் வாங்கினார். அதற்கு என்ன காரணம் எனில் இந்தப் படங்களை எல்லாம் நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படங்கள் தான். அது தவறாகி அதனால் ஏற்பட்ட கடன் சுமையை சுமக்கும் பொழுது ஏற்பட்ட அந்த கஷ்டம் தான் அந்த அளவுக்கு கஷ்டமான சூழலுக்கு தள்ளப்பட்டார் சிவகார்த்திகேயன். இவரை யாரும் தள்ளிவிடவில்லை .இவரே அப்படி ஒரு விஷயத்தை செய்து அகலக்கால் வைத்து அவர் மாட்டிக் கொண்டார் .
இப்பொழுது கடன் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பொறுத்த வரைக்கும் ஒன்றுதான். அது சிவகார்த்திகேயனாக இருந்தாலும் சரி கமலாக இருந்தாலும் சரி சரியாக வட்டியை கொடுத்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். குறிப்பிட்ட தேதியில் அசலை கொடுத்து விட்டால் பிரச்சினை எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் அசலும் வட்டியும் அந்த தவணைக்காலம் தவறும் பொழுது அவர்கள் வேறொரு முகத்தை காட்டுவார்கள்.
அப்படி சிவகார்த்திகேயனுக்கு கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்தது .அதை விட்டு இந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பதை பார்க்காமல் பொது மேடையில் இந்த பிரச்சனைகளை எல்லாம் வைத்து கண்ணீர் விட்டு கொடுத்தவர்களை பிளேம் பண்ணுவது என அப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்தார். அது கடைசியில் அவருக்கு பப்ளிசிட்டியாகவே மாறியது .இதை அவர் ஒரு ஸ்ட்ராட்டஜியாகவும் பயன்படுத்திக்கொண்டார் என பிஸ்மி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.