இளையராஜா பற்றி ரஜினி என்ன சொன்னாரு? இன்னைக்கும் ரசிக்க இதுதான் காரணமா?
இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களில் ஒரு உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்துவதுதான். அந்தக் காலத்தில் போற போக்கில் அதைப் பயன்படுத்தி விட்டுப் போவார்கள். ஆனால் இப்போது பழைய பாடல்களுக்குக் கொடுக்குற முக்கியத்துவத்தைப் புதிய பாடல்களுக்குக் கூட தருவதில்லை. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இருந்து இந்த உத்தி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பே லோகேஷ் கனகராஜின் பல படங்களுக்கு இந்த உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இளையராஜாவிடம் இதுபோன்ற பல படங்களில் கேட்காமலேயே பாடல்களைப் பயன்படுத்தி விடுகின்றனர். அதன்பிறகு காபிரைட் வழக்கு தொடுக்கிறார். பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது. எந்த காலத்திலும் இளையராஜாவின் பாட்டு, பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் சசிக்குமார் எழுதி இயக்கி நடித்த படம் சுப்பிரமணியபுரம்.
அதுல முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தித் தான் எடுக்கப்பட்டது. குட் பேட் அக்லியில் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. அது ஏற்படுத்திய தாக்கம்தான் படத்திற்கு அவ்ளோ பெரிய வெற்றி கிடைத்தது. ஆனா அவர்கள் நன்றி கெட்டவர்கள்னு நிரூபிச்சிட்டாங்க. நாங்க அந்த மியூசிக் கம்பெனியில வாங்கிட்டோம். இவருக்கு எதுக்கு காசு கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க.
ரெட்ரோ படத்துல ரஜினியோட ஜானில இருந்து செனோரிட்டா என்ற பாடலை முழுமையாகப் பயன்படுத்தினாங்க. நாளை வெளியாக உள்ள தொடரும் என்ற மோகன்லால் படத்தில் இளையராஜாவுக்கு நன்றி சொல்லி விடும் டைட்டில் கார்டு போடப்படுகிறது. தொடர்ந்து அவரது பாடல்களையும் படத்தில் பயன்படுத்தி உள்ளார்களாம். இன்னும் வரும் ஒரு டஜன் படங்களுக்கு இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டு வந்து நிற்கிறார்களாம்.
நல்ல இசை என்றும் மக்கள் மனதில் நிற்கும். அன்னக்கிளி பாட்டு அன்னைக்கே இருந்து இன்று வரை பேசும். இளமை இதோ இதோ பாடல் என்னைக்குமே பேசும். ரஜினி இளையராஜா பற்றி சொல்லும்போது ராஜா சார் வந்து இசை சாமி. பல பேரை வாழ வச்ச சாமி. பல தயாரிப்பாளர்களை வாழ வைத்த கடவுள். இசைஞானி இளையராஜா என்று இளையராஜாவின் 1000மாவது படவிழாவில் தெரிவித்துள்ளார். அது 100 சதவீத உண்மை. இன்னைக்கு எத்தனையோ தயாரிப்பாளர்கள் ப்ரீயா இசை அமைத்துக் கொடுத்ததாக சொல்கின்றனர்.
பிரதாப் போத்தன், சங்கிலி முருகன், பி.வாசுன்னு பலர் அந்தப் பட்டியலில் இருக்காங்க. இப்போ வரை இளையராஜாவின் இசையை ரசிக்கிறாங்கன்னா ஒரு மனிதனுக்கு ரசனை சரியா இருக்கு என்பதுதான் பொருள். ரசனை சரியாக இருந்தால் தான் சரியான விஷயத்தைப் பேச முடியும்.