சிங்கப்பெண்ணே: மித்ராவிடம் வசமாக சிக்கிய சௌந்தர்யா... மகேஷின் வீடியோ கிடைக்குமா?
சிங்கப்பெண்ணே: சன்டிவியில் சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன என்ற ஹைப்பை உண்டாக்குகிறது. அந்த வகையில் இன்று என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்.
ஆனந்தி தன்னால் வீடியோவை வாங்க முடியவில்லை என்றதும் ரூட்டை மாற்றி சௌந்தர்யாவை மகேஷ் ரூமுக்கு அனுப்பி வைக்கிறாள். இது கருணாகரனுக்கும், மித்ராவுக்கும் தெரியவில்லை. மித்ரா கருணாகரனை லஞ்ச் டைம் கூட ஆனந்தியைக் கண்காணிக்க வேண்டும். அவள் சாப்பிடுற இடத்துக்கே போய் சாப்பிடு என்று உத்தரவிடுகிறாள்.
மொட்டை வெயிலில் கருணாகரன் லேபர்களுடன் இணைந்து சாப்பிட ரொம்பவே கஷ்டப்படுகிறான். உஷா அவனுக்கு ஆதரவாக குடை பிடிக்கிறாள். தலையில் இருந்து அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. இதை முத்துவும், அன்புவும் குடைக்குள் மழை என்று கிண்டல் செய்கின்றனர்.
இந்த நிலையில் சௌந்தர்யா யாருக்கும் தெரியாமல் மகேஷ் ரூமுக்குச் சென்று ஆனந்தி கேட்ட சில்வர் ஜூப்ளி வீடியோவைக் கேட்கிறாள். எதற்கு என மகேஷ் கேட்க அந்த பங்ஷன்ல எல்லாரும் நல்லா ஆடுனீங்க. அதுல உங்க டான்ஸ் சூப்பர்னு ஆனந்தி சொன்னா. அதனால தான் நாங்க எல்லாரும் பார்க்கணும்னு கேட்டாள்னு சொல்லவும் மகேஷ் சந்தோஷத்தில் ஆச்சரியப்படுகிறான். ஆனந்தி என் டான்ஸ பாராட்டுனாளான்னு கேட்கிறான்.
அந்த சந்தோஷத்தில் அந்த வீடியோ வீட்ல இருக்கு. நாளைக்குத் தர்றேன்னு சொல்லி விடுகிறான். அந்த நேரம் பார்த்து மகேஷின் அறைக்கு மித்ரா வருகிறாள். சௌந்தர்யாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். எதற்கு வந்தேன்னு கேட்டு அதட்டுகிறாள். உடனே மகேஷ் அவள் ஒரு தேவைக்காக வந்து இருக்கிறாள்னு சொல்லி மித்ராவை அனுப்பி விடுகிறான்.
சௌந்தர்யாவிடம் ஆனந்தி வீடியோ கேட்டீயான்னு கேட்கிறாள். ஆமா. நாளைக்குத் தருவதாகச் சொன்னார் என்றதும் அவளுக்கு நிம்மதி வருகிறது. உடனே மித்ரா உன்னைப் பார்க்கலை இல்லன்னு கேட்கிறாள். அவள் மகேஷ் சாரிடம் பேசும்போதே வந்து எல்லாத்தையும் கேட்டு விட்டாள் என்கிறாள் சௌந்தர்யா. இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைகிறாள் ஆனந்தி. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.