44வருஷமா ஏமாற்றிக் கொண்டிருக்கும் வைரமுத்து.. உண்மையை உடைத்து பேசிய தயாரிப்பாளர்
வைரமுத்து:
சினிமாவில் ஒரு புகழ்பெற்ற கவிஞராக இருந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றவர் வைரமுத்து. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக இந்த சினிமாவில் ஒரு சிறந்த பாடல் ஆசிரியராக இருந்து வருகிறார், இவரைப் பொருத்தவரைக்கும் இவர் 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் என்ற படத்தில் அமைந்த பொன்மாலைப் பொழுது என்ற பாடலுக்கு கவிதை எழுதியதன் மூலம் முதன் முதலில் கவிஞராக அறிமுகமானார் என்று தான் அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்,
ஏன் பல மேடைகளில் வைரமுத்துவும் அதைத்தான் கூறுவார். நான் பாரதிராஜாவால் நிழல்கள் என்ற படத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டேன். அதில் அமைந்த பொன் மாலை பொழுது என் வாழ்க்கையை மாற்றிய பாடல் என கூறியிருப்பார் வைரமுத்து. ஆனால் அது முற்றிலும் பொய் என பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவிஸ் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
வைரமுத்துவை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியது ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளரான பாலாஜி. அவர் முதன்முதலில் சூலம் என்ற திரைப்படத்திற்காக தான் வைரமுத்துவை பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதுவும் பாலாஜியிடம் வைரமுத்துவை அறிமுகப்படுத்தியது இளையராஜா தானாம். ஒரு சமயம் இளையராஜாவிடம் வைரமுத்துவை பாரதிராஜா அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இளையாராஜாவால் அறிமுகம்:
அப்போது வைரமுத்து அவருடைய புத்தகத் தொகுப்புகளை எல்லாம் இளையராஜாவிடம் காண்பித்து அதன் மூலம் ஈர்த்திருக்கிறார். அந்த ஒரு அறிமுகத்தினால் தான் தயாரிப்பாளர் பாலாஜியிடம் இளையராஜா எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். நன்றாக கவிதை எழுதுகிறான். அவனை வேண்டுமென்றால் இந்த படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்தலாம் என சொல்லி வைரமுத்துவை இந்த படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
சூலம் படத்திற்காக ரிக்கார்டிங்க் எல்லாம் முடிந்து விட்டதாம். ஆனால் படம் ரிலீஸ் ஆவதில் காலதாமதம் ஏற்பட அதன் பிறகுதான் நிழல்கள் படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இத்தனை வருடங்களாக அதையெல்லாம் மறைத்து விட்டு அந்த ஒரு பாடல் தனக்கு புகழ் கொடுத்து விட்டது என்ற காரணத்தினால் தன்னை அறிமுகப்படுத்திய வரை இதுவரை அவர் வெளியில் சொல்லவே இல்லை என பைரவி படம் மூலம் ரஜினியை ஹிரோவாக அறிமுகம் செய்த இயக்குனர் எம்.பாஸ்கரினி மகனான பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் வைரமுத்துவை பற்றி பேசி இருக்கிறார்.