ஆபீஸ் பாயைக் கூட தயாரிப்பாளர் ஆக்கி அழகுபார்த்த கேப்டன்... எந்தப் படத்துக்குத் தெரியுமா?
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இன்றும் அவர் தனித்துவம் வாய்ந்தவராகக் கொண்டாடப்படுகிறார். 2023, 2024ல் வெளியான பல படங்களில் 'மிஸ் யு கேப்டன்'னு கொண்டாடிட்டு வருகிறார்.
'மிஸ் பண்றோம்'னு சொல்லும்போது அந்த வருத்தங்களை நம்மால் காண முடிகிறது. லப்பர் பந்து படத்துல 'நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்'னு பாட்டு வரும்போது திரையரங்கில் ரசிகர்களின் கைதட்டலைப் பார்க்க முடிகிறது. அந்த அளவில் அவர் இன்னும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.விஜயகாந்த்
விஜயகாந்த் ஆபீஸ்ல நிறைய பேர் வேலை பார்க்கிறாங்க. கட்சி அலுவலகம், அவரது சொந்த அலுவலகம், சினிமா, அலுவலகம், ராவுத்தர் பிலிம்ஸ்னு சொல்லலாம். அப்படி ஒரு பையன் விஜயகாந்த் ஆபீஸ்ல வேலை பார்க்கிறான். யார் யாருக்கு என்ன வேணுமோ அதை எல்லாம் வாங்கிக் கொடுப்பாரு. அதுதான் அந்தப் பையனோட வேலை.
அதே போல விஜயகாந்துக்கு என்ன சாப்பாடு வருதோ அதே தான் அவரது அலுவலகத்தில் உள்ள அத்தனை ஊழியர்களுக்கும் வரும். அவரைத் தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் உடனடியாக செய்து கொடுப்பார். சூட்டிங் ஸ்பாட்டிலும் தனக்கு என்ன உணவோ அதே போல எல்லாருக்கும் கொடுப்பவர் தான் விஜயகாந்த். விஜயகாந்தோட நெறைஞ்ச மனசைத் தான் இது காட்டுது.
ஆபீஸ் பாயாக வந்து வேலைக்கு சேர்ந்த ஒரு பையன் சின்சியரா வேலை பார்க்கிறான். அவன் ஒரு கட்டத்தில் நல்லா வேலை செய்வதால் லொகேஷன் பார்க்குறதுல இருந்து எல்லா வேலைகளுக்கும் அந்தப் பையனையும் சேர்த்துக் கொள்கிறார். அவன் வளர்ந்து வருகிறான். ஒருநாள் விஜயகாந்திடம் 'அண்ணே நான் உதவி டைரக்டர் ஆகணும்'னு ஆசைப்படுறேன்னு சொல்கிறார். 'அப்படியா, சரிடா'ன்னுட்டு சொல்கிறார் விஜயகாந்த்.
ஒருநாள் ஒரு ஓட்டல்ல ஒரு படத்துக்கான கதை விவாதம் பேசப்படுகிறது. அப்போ 'முருகனை வரச் சொல்லுடா'ன்னு ஒருவரிடம் விஜயகாந்த் சொல்லி விடுகிறார். தன்னை எதுக்கு அழைக்கிறார்? எதுவும் வாங்கிக் கொடுக்க வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தில் ஆபீஸ் பாயான முருகன் விஜயகாந்த் இருக்கும் ஓட்டலுக்குச் செல்கிறான்.
அங்கு சுரேஷ் கிருஷ்ணா, விஜயகாந்த், அசோசியேட் டைரக்டர் எல்லாரும் இருக்காங்க. உடனே விஜயகாந்த் சுரேஷ் கிருஷ்ணாவிடம், 'சார் இவன் நம்ம ஆபீஸ் பாய். ரொம்ப வருஷமாக வேலை பார்த்துட்டு இருக்கான். இவனை உங்களோட அசிஸ்டண்ட்டா சேர்த்துக்கோங்க'ன்னு சொல்றாரு விஜயகாந்த்.
'அதுக்கென்ன. நீங்க சொல்லிட்டீங்கள்ல. சேர்த்துக்கிட்டா போச்சு'ன்னு சொல்றார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த வகையில் விஜயகாந்த் ஆபீஸ் பாய் சொன்னதையும் மனதில் நிறுத்திக்கொண்டு மறக்காமல் தனது அடுத்த படத்திற்கு அவருடைய ஆசையை நிறைவேற்றுகிறார். இது எல்லோரும் செய்து விடும் விஷயமல்ல. அந்தப் படம் கஜேந்திரா.
ஆனா அந்தப் படத்துல அசிஸ்டண்ட் டைரக்டர் பேரே வரல. ஆனா அதுக்கு அடுத்த படத்திலும் விஜயகாந்த் அந்த பையனை அந்தப் படத்து டைரக்டர்கிட்ட சொல்லி அசிஸ்டண்ட் டைரக்டராக்குறாரு. அந்தப் படத்தில் அந்த முருகனின் பெயர் இடம்பெற்றது.