தனியா வந்தா ஆப்பு வச்சிருவாங்க! எதிராளியுடன் கூட்டணி வைத்த விஜய் - லியோ சக்ஸஸ் மீட்டில் யார் வராங்கனு தெரியுமா?

by Rohini |
vijay
X

vijay

Leo Success Meet: விஜய் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான லியோ படத்தில் விஜயுடன் சேர்ந்து த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் , மடோனா செபாஸ்டியன் போன்ற பல முன்னனி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

படம் வெளியாகி வசூலில் எப்போதும் போலவே விஜய் சாதனை படைத்திருக்கிறார். ஆனால் வேறெந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு லியோ படத்தில் பல விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் லியோ படத்தின் ஆடியோ விழாவை கோலாகலமாக கொண்டாட இருந்தார்கள்.

இதையும் படிங்க: KH234 படத்தில் ஒருவழியா ஹீரோயினை புடிச்சுட்டாங்கய்யா! ஆனால் மணிரத்தினத்திற்கு செட் ஆகாதே

ஆனால் எதிர்பாராத விதமாக டிக்கெட் பிரச்சினைகள் காரணமாக அப்படியே இசை வெளியீட்டு விழாவை நிறுத்தி விட்டனர். படத்தை ப்ரோமோட் செய்ததும் படத்தின் இயக்குனரான லோகேஷும் உதவி இயக்குனராக இருக்கும் ரத்னக்குமாரும்தான்.

படத்தில் அத்தனை நடிகர்கள் இருந்தும் ஒருத்தர் கூட பேட்டி கொடுக்கவே இல்லை என்பதுதான் சற்று வருத்தப்பட வேண்டிய விஷயம்.இந்த நிலையில் படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் படத்தின் வெற்றிவிழாவை கொண்டாட படக்குழு திட்டமிட்டனர்.

இதையும் படிங்க: லோகேஷ் பேட்டி பாத்தாத்தான் படம் புரியுமா?!.. என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!…

அதற்காக காவல்துறையிடம் அனுமதியும் கேட்டிருந்தனர். காவல்துறையும் அனுமதி அளித்ததன் அடிப்படையில் நாளை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் கோலாகலமாக வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். 4 மணியில் இருந்தே ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட இருக்கிறார்களாம்.

பாஸ் இருக்கிறவர்களுக்கு மட்டுமே அனுமதியாம். இந்த விழாவிற்கு கமலும் ரஜினியும் வருவதாக ஒரு சில செய்திகள் வெளியாகின. கமல் வருவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தன் சிஷ்யனுக்காக மனுஷன் ஓடோடி வந்து விடுவார்.

இதையும் படிங்க: அம்மா நடிகையுடன் டச்சிங் டச்சிங்கில் அந்த தயாரிப்பாளரா? விஷயம் தெரிஞ்சு டெரரான அந்த நடிகை

ஆனால் ரஜினி கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. தனது அடுத்தப் படத்தை லோகேஷ்தான் எடுக்கிறார் என்பதை கருத்தில் கொண்டாவாவது ரஜினி வரலாம். ஆனால் வந்தால் எதிர்பாராத பிரச்சினைகள் வரும் என்பதால் ரஜினி வரமாட்டாராம்.

Next Story