இருபது நிமிட சீனை மூன்றே நிமிட பாடலில் சொன்ன கண்ணதாசன்.. படக்குழுவையே வியப்பில் ஆழ்த்திய கவியரசர்..
Lyricist Kannadasan: கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பழங்கால பாடலாசிரியர், கவிஞர், நடிகர்,. இவர் தமிழில் பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல் வரிகள் மனதிற்கு ஒரு வித இதத்தை தரும். இவர் தமிழில் பல வித கட்டுரைகள், கவிதைகள், புத்தகங்கள் என பலவற்றை படைத்துள்ளார். மிக உயிரோட்டத்துடன் பாடல்களை எழுதுபவர். இதனாலேயே இவரை கவியரசர் என அழைப்பர். இவரின் பாடல் வரிகள் ஒரு இதம் என்றால் இவரின் வரிகளுக்கு இசையமைக்கும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இசை ஒரு […]
Lyricist Kannadasan: கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பழங்கால பாடலாசிரியர், கவிஞர், நடிகர்,. இவர் தமிழில் பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல் வரிகள் மனதிற்கு ஒரு வித இதத்தை தரும். இவர் தமிழில் பல வித கட்டுரைகள், கவிதைகள், புத்தகங்கள் என பலவற்றை படைத்துள்ளார். மிக உயிரோட்டத்துடன் பாடல்களை எழுதுபவர். இதனாலேயே இவரை கவியரசர் என அழைப்பர்.
இவரின் பாடல் வரிகள் ஒரு இதம் என்றால் இவரின் வரிகளுக்கு இசையமைக்கும் விசுவநாதன் ராமமூர்த்தியின் இசை ஒரு இதம். இவர்களின் கூட்டணி அந்த காலம் முதல் இந்த காலம் வரை இன்னும் நம் மனதில் நீடித்து நிற்கிறது. கண்ணதாசன் அவர்கள் 1957ஆம் ஆண்டு வெளியான மகாதேவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக தனது அத்தியாயத்தினை தொடங்கினார்.
இதையும் வாசிங்க: தோளுக்கு மேல பையன் இருக்கும் போது ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை! அந்த பாக்யலட்சுமி சீரியல் பிரபலமா?
பின் மன்னாதி மன்னன், தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், சரஸ்வதி சபதம் என பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல்களை கேட்டாலே நமது கவலை தீரும். அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் வரிகள் அக்கால இளைஞர்களுக்கு ஒரு எழுச்சி கவிதையாக இருந்தது. இவர் சூர்யகாந்தி திரைப்படத்தில் எழுதிய பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது பாடல் நமது வாழ்க்கைக்கான அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் அக்காலத்தில் புரட்சியை ஏற்படுத்திய படம் கர்ணன். இப்படத்தினை பி.ஆர்.பந்துலு தயாரித்தார். இவரே இபப்டத்தின் இயக்குனரும் ஆவார். மேலும் இப்படத்தில் சிவாஜி கணேசன், என்.டி.ராம ராவ், சாவித்ரி, அசோகன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கண்ணதாசன் பாடலாசிரியராகவும், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பாளர்களாவும் இருந்தனர்.
இதையும் வாசிங்க: ரஜினிக்கு இவ்வளவோ கஞ்சத்தனம் ஆகாதுப்பா… இந்த விஷயத்துல கமல், அஜித்லாம் க்ரேட்ல!
இப்படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த பின் இயக்குனருக்கு ஒரு யோசனை தோன்றியது. கண்ணன் அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்வதை ஒரு காட்சியாக வைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார். அதனை தனது உதவி இயக்குனரிடமும் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு காட்சி வைத்தால் படத்தின் நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகமாகும். என்ன செய்வதென்று தெரியாமல் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மிகவும் எளிமையாய் ’அப்போ கண்ணாதாசனை கூப்பிடுங்க’ என்றுள்ளார். அவர் இந்த 20 நிமிட பாடலை மூன்றே நிமிடத்தில் முடிப்பார் என தெரிவித்துள்ளார்.
பின் அவரின் விருப்பப்படி கண்ணாதாசனும் வந்தார். கண்ணன் அர்ஜுனனுக்கு கீத உபதேசம் செய்யும் புத்தகத்தினை படித்தார். ஆனால் அப்புத்தகம் கடலளவு பெரியது. ஆனால் கண்ணாதாசன் அப்புத்தகத்தை படித்து பாமர மக்களுக்கும் புரியும்படியான எளிமையான தமிழில் கொடுத்தார். இப்பாடல்தான் கர்ணன் படத்தில் உள்ள “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா” பாடல். இவ்வாறு அசாத்திய திறமையை கொண்டவர் கண்ணதாசன். இவரின் இத்திறமை படக்குழுவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் வாசிங்க: வேட்டையனா வரச்சொன்னா ரஜினி பார்ட்- 2வா வந்து நிக்குற! வாசுவை திக்குமுக்காட வைத்த லாரன்ஸ்!..