எல்லாம் நடிப்புத்தான்! உண்மையிலேயே அவங்க எப்படி தெரியுமா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பற்றி பிரபலம் கூறிய தகவல்

Pandian Stores: எப்படியோ ஒரு வழியாக முடிச்சுட்டாங்கய்யா சீரியலை என்று சொல்லுமளவுக்கு கடந்த ஐந்து வருடங்களாக மக்களின் பேராதரவை பெற்ற சீரியலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் அமைந்தது. அண்ணன், மூன்று தம்பிகள் இவர்களுக்கிடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி இந்த சீரியல் உருவானது. இந்த சீரியல் ஆரம்பித்த புதிதில் டி.ஆர்.பியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்தது. முக்கிய கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் மரணம் இந்த சீரியலுக்கு விழுந்த முதல் அடியாக அமைந்தது. அதன் பின் […]

By :  Rohini
Update: 2023-11-02 06:05 GMT

pandi

Pandian Stores: எப்படியோ ஒரு வழியாக முடிச்சுட்டாங்கய்யா சீரியலை என்று சொல்லுமளவுக்கு கடந்த ஐந்து வருடங்களாக மக்களின் பேராதரவை பெற்ற சீரியலாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் அமைந்தது. அண்ணன், மூன்று தம்பிகள் இவர்களுக்கிடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி இந்த சீரியல் உருவானது.

இந்த சீரியல் ஆரம்பித்த புதிதில் டி.ஆர்.பியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்தது. முக்கிய கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் மரணம் இந்த சீரியலுக்கு விழுந்த முதல் அடியாக அமைந்தது. அதன் பின் இந்த கதாபாத்திரத்திற்கே மூன்று பேர் மாறினார்கள்.

இதையும் படிங்க: நண்பன் கேட்டால் உசுற கூட தருவேன்! இத விட என்ன வேணும்? கமலுக்காக மாஸ் காட்ட போகும் ரஜினி

இடையிலேயே சீரியலில் கொஞ்சம் தொய்வும் ஏற்பட ரசிகர்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வரவேற்பும் குறையத்தொடங்கியது. எப்படியாவது சீரியலை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இதற்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டனர்.

ஆனால் இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் ஒரு குழந்தை நடித்திருக்கும். அந்த குழந்தையின் அம்மா சமீபத்தில் இந்த சீரியலை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இது அதுல்ல!.. தடவல் மன்னனா நீ!.. நிக்சனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…

அப்போது என் குழந்தை நன்றாக நடிக்கிறது என்று யாருமே என்னிடம் வந்து இதுவரை சொன்னதில்லை என்றும் அவர்களின் நெருக்கம் காட்சிகளின் போது மட்டும்தான் என்றும் எங்களை யாரோ மாதிரிதான் பார்ப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும் இதே கார் , சொகுசு வண்டிகளில் வந்து இறங்கினால் அதுக்கு கிடைக்கிற மரியாதையே வேற. பெரிய நடிகர்கள் வரும் போது நாங்கள் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் வரும் போது எங்களை எதோ மாதிரி பார்ப்பார்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பிரதீப்பை விட நிக்சன் தான் என்னை தப்பா பேசுனான்… அக்காவ இப்டியா பேசுவாங்க… வினுஷா சொல்லும் ஷாக்..!

Tags:    

Similar News