விஜயை விட கம்மிய சம்பளம் பேசிய ஏஜிஎஸ் - செம கடுப்பான ரஜினி...
விஜயை விட கம்மிய சம்பளம் பேசிய ஏஜிஎஸ் - செம கடுப்பான ரஜினி...
;அண்ணாத்த படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடியை தொடும் என்பதால் இப்படத்தை தயாரிப்பதிலிருந்து ஏஜிஎஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது. மேலும், லைக்கா புரடெக்ஷன் நிறுவனத்தை அணுக ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களும் பின் வாங்கினால் இருக்கவே இருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் என ரஜினி கருதுவதாக செய்திகள் வெளியானது.
ஆனால், ரஜினி தரப்பு மற்றும் ஏஜிஎஸ் தரப்பு இரண்டும் இப்போதும் பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறதாம். பிரச்சனை என்னவெனில், கொரோனா காரணமாக ஏற்பட்ட நஷ்டங்கள், மற்றும் தியேட்டர்கள் மூடியிருக்கும் சூழ்நிலைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு ரஜினி தனது சம்பளத்தை ரூ.70 கோடியாக குறைத்துக்கொள்ள வேண்டும் என ஏஜிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால், ரஜினி தரப்பு அதை ஏற்கவில்லை. விஜயே ரு.85 கோடி சம்பளம் வாங்கும் போது அதை விட குறைவாக எப்படி வாங்கிக்கொள்ள முடியும் என ரஜினி தரப்பு கூற, அதை ஏஜிஎஸ் தரப்பும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே, ரஜினியின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் தயாரிக்குமா இல்லை கை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.