ஆங்கில தலைப்புகளுக்கு வருகிறது ஆப்பு! - பீஸ்ட் தலைப்பு மாறுமா?...
ஆங்கில தலைப்புகளுக்கு வருகிறது ஆப்பு! - பீஸ்ட் தலைப்பு மாறுமா?...
;0 வருடங்களுக்கு முன்பு மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழில் தலைப்பு வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை தரப்படும் என அறிவித்தார். எனவே, திரைப்படங்கள் தமிழில் பெயரிலேயே வெளியானது. தற்போது அதை மீண்டும் கையில் எடுக்கவுள்ளாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் மற்றும் தியேட்டருக்கு தமிழக அரசு விதிக்கும் 8 சதவீதம் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரைத்துறையினர் வைத்த கோரிக்கைக்குதான் ஸ்டாலின் இதை கூறியுள்ளாராம்.
8 சதவீதம் வரிவிலக்கு என்றால் அனைவரும் தமிழில் பெயர் வைப்பார்கள். ஆனால், ஏற்கனவே ஆங்கில தலைப்புகள் வைக்கப்பட்டு தயாராகி வரும் திரைப்படங்களின் தலைப்பை மாற்ற வேண்டி வரும். உதாரணமாக விஜய் நடிக்கும் பீஸ்ட். இப்படத்தின் தலைப்பு மாறுமா என தெரியவில்லை. அதேபோல், விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் டான் ஆகிய படங்களும் தலைப்பு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.