பீஸ்ட் படப்பிடிப்பில் விஜயை சந்தித்த தல தோனி... வைரல் புகைப்படம்....

பீஸ்ட் படப்பிடிப்பில் விஜயை சந்தித்த தல தோனி... வைரல் புகைப்படம்....

;

By :  adminram
Published On 2021-08-12 14:27 IST   |   Updated On 2021-08-12 14:27:00 IST

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கூல் கேப்டனாக வலம் வந்தவர் தோனி. தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ‘எங்க தல தோனி’ என செல்லமாக அழைக்கின்றனர். பல கோடி ரசிகர்களை கொண்டவர்.

அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக கலந்து கொள்வதற்காக அவர் சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜயை காண விரும்பிய அவர் பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். அவரை வரவேற்ற விஜய் கேரவானில் அவரை அமர வைத்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Similar News