காத்துவாக்குல ரெண்டு காதல் - ரிலீஸ் தேதியை முடிவு செய்த விக்னேஷ் சிவன்

காத்துவாக்குல ரெண்டு காதல் - ரிலீஸ் தேதியை முடிவு செய்த விக்னேஷ் சிவன்

;

By :  adminram
Published On 2021-08-19 18:24 IST   |   Updated On 2021-08-19 18:24:00 IST

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. தொடர்ந்து, நயனின் காதலராகவும் ப்ரோமோஷன் பெற்றார்.

தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் இவரின் வெற்றி கூட்டணியான விஜய் சேதுபதி, நயனுடன் சமந்தாவும் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் தீபாவளிக்கு 2 வாரங்கள் முன்பு அல்லது 2 வாரங்கள் பின்பு வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

Similar News