ரசிகர்களின் மனதை கொய்த மனீஷா கொய்ராலா...!
ரசிகர்களின் மனதை கொய்த மனீஷா கொய்ராலா...!
;ரசிகர்களின் உள்ளங்களை அழகால் கொள்ளை அடிப்பவர்கள் ஒரு சிலர். ஒரு சிலர் நடிப்பால் கொள்ளை அடிப்பர். ஒரு சிலர் கவர்ச்சியால் கொள்ளை அடிப்பர். ஒரு சிலர் அழகு மற்றும் நடிப்பால் கொள்ளை அடிப்பர். ஒரு சிலர் தான் நடிப்பு, அழகு, கவர்ச்சி என எல்லாவற்றாலும் மனதை கொய்து எடுப்பார்கள். அவர் யாரென்று இந்த க்ளுவிலிருந்து நீங்களே கண்டுபிடித்து விடலாம். இனி இவரைப் பற்றி...
16.8.1970ல் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்தார். ராஜ பரம்பரை என்றால் அது இவரே தான். ஆம் நேபாளத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். நடிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இவர் 2019ல் நேபாள நாட்டின் நல்லெண்ண தூதுவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தி படங்களில் முதன்மையானவராக நடித்து வந்தார். இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும், நேபாளியிலும் படங்கள் நடித்துள்ளார். வாரணாசியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அவர் மருத்துவராகவே விரும்பினார். ஆனால் மாடலிங் துறை கைகொடுத்தது. அதன் மூலமாகவே பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
1942 ஏ லவ் ஸ்டோரி என்ற இந்திப்படமும், தமிழில் மணிரத்னத்தின்; பம்பாய் படமும் இவரை திரும்பிப் பார்க்க வைத்தன. 1996ல் வெளியான அக்னி சாக்ஷி என்ற இந்திப்படம் இவரது கேரியரை 1 படி உயர்த்தியது. 1997ல் ஷாருக்கானுடன் இவர் நடித்த இந்திப்படம் தில் சே. மணிரத்னம் இயக்கிய இப்படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது.
இப்போது இவர் நடித்த மறக்க முடியாத படங்கள் சிலவற்றைக் காணலாம். ;
உயிரே
ஷாருக்கான், மனீஷா கொய்ராலா, பிரீத்தி சிந்தா, சக்கரவர்த்தி ஆகியோரது படங்களில் மனிஷா யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். மணிரத்னம் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.தேசியத் திரைப்பட விருது 1999ல் கிடைத்தது. சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்பட 6 பிலிம்பேர் விருதுகளை இப்படம் பெற்றது.
உயிரே பாடல்கள் இப்படத்தின் பாடல்கள் அத்தனையும் சூப்பர். தக்க தையா..., நெஞ்சினிலே..., பூங்காற்றிலே, சந்தோஷ கண்ணீரே, என்னுயிரே...என்னுயிரே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பம்பாய்
பம்பாய் படம் 1995ல் வெளியானது. மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பின்னி எடுத்திருப்பார். பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடந்த கலவரங்கள், உண்மைச் சம்பவங்களால் பின்னப்பட்ட கதை. பாடல்கள் அனைத்தும் செம...ஹிட்.
பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலா வசீகர அழகு தேவதையாக வலம் வந்தார். இவருக்காக பல தடவை படத்தைப் பார்த்த ரசிகர்கள் உண்டு.
அந்த அரபிக்கடலோரம், பூவுக்கு என்ன, உயிரே உயிரே, குச்சி குச்சி ராக்கம்மா, கண்ணாளனே, பம்பாய் ஆரம்ப இசை என பாடல்ளில் சபாஷ் போட வைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தியன்
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என வழக்கமான வெற்றிக் கூட்டணி தான் இந்தப் படத்திலும் உள்ளது. இப்படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். அவருடன் மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, செந்தில், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு காதலிக்கின்றனர்.
அக்கடான்னு நாங்க, மாயா மச்சீந்திரா, பச்சைக்கிளிகள், கப்பலேறிப் போயாச்சு, டெலிபோன் மணி போல் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வவேற்போi வ
முதல்வன்
1999ல் வெளியான இந்த படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா நடித்து அசத்தினார். இந்தியில் நாயக் என்ற பெயரில் வெளியானது. அர்ஜூனுக்கு ஜோடியாக மனிஷாவும், 1980 நடித்து அசத்தினார். இப்படத்தில் அர்ஜூன், ரகுவரனுடன் கோணும் காட்சி தான் படத்தின் ஹைலைட். உப்புக்கருவாடு, முதல்வனே...வனே..., குறுக்கு சிறுத்தவளே, ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று பிறந்தநாள் காணும் மனீஷா கொய்ராலாவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.