தட்டி தூக்கிய அஜித்... இந்திய அளவில் முதலிடம் பிடித்த வலிமை...

தட்டி தூக்கிய அஜித்... இந்திய அளவில் முதலிடம் பிடித்த வலிமை...

;

By :  adminram
Published On 2021-08-23 11:42 IST   |   Updated On 2021-08-23 11:42:00 IST

தமிழ் சினிமாவில் சமூகவலைத்தளங்களில் அதிக பில்டப் கொடுக்கப்பட்ட படம் என்றால் அது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம்தான். ஹெச்.வினொத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது.

இப்படம் துவங்கியது முதலே டிவிட்டரில் #valimai என்கிற ஹேஷ்ட்டேக்கை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் அப்படத்தின் தயாரிப்பாளரை இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நச்சரித்து வந்தனர். மேலும், இப்படம் தொடர்பான அப்டேட், மற்றும் அஜித்தின் புகைப்படங்களை #valimai என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியே அவர்கள் பகிர்ந்து வந்தனர்.,

இந்நிலையில், இந்திய அளவில் இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக் என்கிற சாதனையை #Valimai ஹேஷ்டேக் பெற்றுள்ளது. #Master ஹேஷ்டேக் 2ம் இடமும், #Ajithkumar என்கிற ஹேஷ்டேக் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த தகவலை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Similar News