இவரு என்ன பல்ப் வாங்கவே பிளான் போடுறாரு? கருப்பு பட ரிலீஸ் மாற்றத்தால் கடுப்பான ரசிகர்கள்!
Karuppu: தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமாக கருப்பு உருவாகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த தற்போது பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அவர்கள் பிளான் செய்திருக்கும் வெளியிட்டு தேதி கசிந்து ரசிகர்களிடம் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும். அது வசூலிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என இருந்த நம்பிக்கையை தேவையே இல்லாமல் பாலிவுட் பக்கம் சென்று உடைத்துக் கொண்டார் நடிகர் சூர்யா.
இரண்டு வருடங்கள் போராடியும் அங்கு வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் கங்குவா திரைப்படம் மூலம் கோலிவுட் பக்கம் வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை குவித்தார்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். தன்னை தான் விமர்சிக்கிறார்கள் கார்த்திக் படம் என்பதால் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆகும் என படக் குழு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதுவும் ரசிகர்களிடம் விமர்சனத்தையே குவித்தது.
இந்நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஆர்.ஜே பாலாஜியின் டைரக்ஷன் எப்போதுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இதனால் கருப்பு திரைப்படம் மீண்டும் சூர்யாவின் கேரியரை மாற்றும் என எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் வெளியிடப்பட முதலில் முடிவு செய்திருந்தது.
தற்போது இப்படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக மாற்றலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏனெனில் கிட்டத்தட்ட 10 நாட்கள் தொடர்ந்து படம் வசூலை குவிக்கும் என்பதால் மாற்றலாமா என யோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அடுத்த பொங்கல் தினத்தில் தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருக்கிறது. அப்படத்திற்கு தான் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கண்டிப்பாக அந்த தினத்தை திட்டமிட்டு படத்தை வெளியிட்டால் வசூல் பெரிய அளவில் அடிவாங்கும்.
அதுமட்டுமல்லாமல் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே கதை வலுவாக இருக்கும் என்பதால் கருப்பு திரைப்படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்தால் மீண்டும் சூர்யாவிற்கு தோல்வி படமாக அமையும் என்பதால் அவர் ரசிகர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.