singappenne: யாரு என்ன சொன்னாலும் ஆனந்திதான் என் பொண்டாட்டி... அன்புவின் பேச்சு எடுபடுமா?

By :  Sankaran
Published On 2025-07-30 23:42 IST   |   Updated On 2025-07-30 23:42:00 IST

சிங்கப்பெண்ணே: ஆனந்திக்கு வளைகாப்பு நடத்தணும். அவளுக்கு வாரிசு வரப்போகுதுன்னு சுயம்பு கல்யாண மண்டபத்தில் யாருமே எதிர்பாராத வகையில் உண்மையைப் போட்டு உடைக்கிறான். அப்போது வார்டன் இவன் வேணும்னே பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்குறான். இவன் சொல்றதைக் கேட்கணும்னு அவசியமில்லன்னு சொல்கிறாள்.

அதற்கு சுயம்பு உங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்போல இருக்கேன்னு சொல்கிறான். அதற்கு சாட்சி சொல்ல வைத்தியரையும் கூடவே அழைத்து வந்துள்ளான். 

நீங்க என்னை இப்போ பேச விடாம செஞ்சிட்டா உண்மையை மறைச்சிடலாம்னு நினைப்பா? ஆமா தெரியாமத் தான் கேட்குறேன். உங்க ஆஸ்டல்ல ஆனந்தி மட்டும்தான் இப்படியா? இல்ல எல்லா பொண்ணுங்களுமே இப்படித்தானான்னு நக்கலாகக் கேட்கிறான் சுயம்பு. அப்போது வார்டன் ஏய் மரியாதைக் கெட்டுரும். என் பொண்ணுகளைப் பத்தி ஏதாவது தப்பா பேசுனேன்னு நிறுத்துகிறாள். அதற்கு அப்பா என்னா கோபம்னு சுயம்பு நக்கலடிக்கிறான். உடனே மாப்பிள்ளை டேய் நிறுத்துறா... இவங்கிட்ட எல்லாம் என்னத்துக்குப் பேச்சு? போலீஸ்க்குக் கால் பண்ணுங்க.

இவங்கிட்டல்லாம் பேசுறதே வேஸ்ட்னு சொல்கிறான். வாய்யா மாப்பிள்ளை புத்திசாலியா இருக்கியே... போலீஸ்தானே தாராளமா வரச்சொல்லு. உண்மையைச் சொன்னா ஏன் பயப்படணும்? உண்மையைச் சொன்னா தண்டிக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்னன்னு கேட்கிறான் சுயம்பு. அப்போதுதான் வைத்தியரை உண்மையைச் சொல்ல சொல்கிறான். வைத்தியரும் தயங்கியபடியே இருக்கிறார்.


ஒரு கட்டத்தில் டாக்டரும், வக்கீலுக்கிட்டேயும் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்வாங்க. அந்த வகையில் வைத்தியரும் பொய் சொல்லக்கூடாது. என்ன வைத்தியரே வியாக்கியானம் பேசாம எங்கிட்ட சொன்ன உண்மையைச் சொல்லுங்கன்னு சுயம்பு சொல்கிறான். அப்போது வைத்தியர் சொன்னதும் அழகப்பன் அரிவாளால் இதுக்குக் காரணமானவனை வெட்ட போகிறான். அப்போது அவன் சொன்னது பொய் இல்லப்பா. உண்மைதான்னு சொல்கிறாள். அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

பையன ஊரை விட்டே ஒதுக்கி வச்சீங்கள்ல. இப்போ ஆனந்திக்கு என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்கிறான் சுயம்பு. யாரு என்ன சொன்னாலும் சரி. ஆனந்தி தான் என் பொண்டாட்டின்னு அன்பு சொல்கிறான். அன்பு அதை முடிவு பண்ண வேண்டிய பொறுப்பு உனக்கு இல்லன்னு சொல்கிறான். அப்பா உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். போயிருங்கன்னு கதறி அழுகிறாள் ஆனந்தி. 

Similar News