பாத்தா பத்திக்கிற கண்ணு.. கூட இருந்தா அந்த நினைப்பே வராது.. சில்க் பற்றி நடிகர் சொன்ன சீக்ரெட்

By :  Rohini
Update:2025-02-20 11:54 IST

ஒருவரின் புகழ் பெருமை அவர் போன பிறகும் பேசப்படும் ,பேசப்படவேண்டும் என்று சொல்வார்கள். அப்பொழுதுதான் அவர் செய்த சாதனைகள் நல்ல விஷயங்கள் வெளியில் தெரியவரும். அந்த வகையில் சினிமாத்துறையில் பல பேரை பற்றி இன்னும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் அனைவருக்கும் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருப்பவர் நடிகை சில்க் ஸ்மிதா. 80களில் முன்னணி நடிகைகளை விட இவருக்குத்தான் அதிக கிரேஷ் இருந்தது. மற்ற நடிகைகளே பொறாமைபடும் அளவுக்கு பார்க்கப்பட்டார் சில்க் ஸ்மிதா.


பொதுவாக ஐட்டம் ஆடலுக்கு ஆடுபவர்தானே என ஏளனமாக பார்ப்பவர்கள் மத்தியில் சில்க் ஸ்மிதா ஒரு மெர்லின் மன்றோவாகா, கிளியோபட்ராவாக காணப்பட்டார். இவரது மேக்கப், உடையலங்காரத்திற்கு ஈடு இணை யாரும் கிடையாது. சாதாரண டச்சப் பெண்ணாக வந்தவர்தான் சில்க் ஸ்மிதா. ஆனால் பிற்காலத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்றளவுக்கு பெரிய வரலாறை உருவாக்கி விட்டு சென்றார்.

ரஜினி முதல் அனைத்து நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது வினியோகஸ்தர்கள் படத்தில் சில்க் ஸ்மிதா டான்ஸ் இருக்கிறதா என்று கேட்டபிறகுதான் அந்தப் படத்தையே வாங்குவார்கள். அந்தளவுக்கு சில்க் ஸ்மிதாவின் மார்கெட் உயர்ந்து நின்றது. இந்த நிலையில் நடிகரும் எழுத்தாளருமான ஜிஎம் குமார் சில்க் ஸ்மிதாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது சூட்டிங் முடித்து ஜிஎம் குமார் மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வரும் போது சில்க் ஸ்மிதா இவருடைய வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பாராம். இரவு 10 மணி வரை உட்கார்ந்து பார்த்துவிட்டு ஜிஎம் குமாருடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டுத்தான் செல்வாராம். எதையோ தேடிக் கொண்டுதான் இருப்பார் சில்க் ஸ்மிதா. கடைசி வரை வாழ்க்கையில் எதையோ தேடிக் கொண்டுதான் இருந்தார் என்றும் ஜிஎம் குமார் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அவர் போடும் அணிகலன்களில் இருந்து உடை வரை பார்த்து பார்த்து செலக்ட் செய்வாராம். குறிப்பாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எழுதிய புத்தக உறையில் இருக்கும் மாடல்களை பார்த்துதான் சில்க் தனக்கான டிரஸ், அணிகலன்கள் எல்லாமே தேர்வு செய்வாராம்.


அவர் மாதிரி இன்னும் எந்த நடிகைகளும் வரவில்லை என்றும் கூறினார். சில்கை பற்றி எத்தனையோ கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன. ஆனால் சில்க் அருகில் இருந்தால் யாருக்குமே அந்த மாதிரி நினைப்பே வராது. அவரை தொடவேண்டும் அல்லது பாலியல் ரீதியாக அணுக வேண்டும் என்ற எண்ணமே வராது என்றும் ஜிஎம் கூறினார்.

Tags:    

Similar News