OTT: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் சூப்பர் படங்கள்… லிஸ்ட் மிஸ் பண்ணாதீங்க!

By :  Akhilan
Update:2025-02-21 16:56 IST

OTT: தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த முக்கிய லிஸ்ட்டில் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பாட்டில் ராதா: பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கி இருக்கும் திரைப்படம். குரு சோமசுந்தரம், சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

வணங்கான்: இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வணங்கான். வித்தியாசமான கதையாக இருந்து சோலோ ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

பேபிஜான்: தமிழில் ஹிட்டடித்த தெறி படத்தினை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் அட்லீ. வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து தற்போது பிரைம் ஓடிடிக்கு வர இருக்கிறது.

ஜியோ ஹாட்ஸ்டார்: தமிழில் ஆபிஸ், இந்தியில் ஊப்ஸப்கையா, ஆங்கிலத்தில் சூட்ஸ் எல்ஏ புதிய வெப்சீரிஸ்கள் வெளியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஏகப்பட்ட ஆங்கில வெப்சீரிஸ்களும் வெளியாக இருக்கிறது.

Tags:    

Similar News