சுழல் 2 ரிலீஸ் ஆக போகுது… அதுக்கு முன்னாடி சுழல் 1 பார்க்கணுமா? இத படிங்க!
Surul: பிரபல வெப் சீரிஸான சுழல் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் முதல் பாகம் குறித்த சில தகவல்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இருவர் இயக்கத்தில் வெளியான வெப்சீரிஸ் சுழல். இதில் நடிகர் பார்த்திபன், கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
காணாமல் போன தங்கையை தேடும் அக்காவாக ஐஸ்வர்யா ராஜேஷ், காவல்துறை அதிகாரியாக கதிர் இருவரும் மிகப்பெரிய மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தனர். 2022 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான இத்தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
எட்டு எபிசோடுகளும் ரசிகர்களை எங்கும் தொய்வை அடைய செய்யாமல் கூட்டி சென்று ஹிட்டடித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக இருக்கிறது. ஆனால் இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை என கூறப்படுகிறது.
தன் தங்கையை தேடி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த கொலையால் தற்போது சிறைச்சாலையில் இருக்கிறார். அவரை காப்பாற்ற போராடும் நீதிபதி லால் திடீரென கொல்லப்படுகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நடிகர் கதிர் நடித்திருக்கிறார்.
அந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளி பட்டியலில் பிரபல நடிகைகள் எட்டு பேர் நடித்திருக்கின்றனர். இதனால் இந்த சீரிஸும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. தமிழில் முழு நீள வெப் சீரிஸ் வந்து சில காலம் ஆகிவிட்டதால் சுழல் இரண்டு தற்போது ரசிகர்களுக்கு இடம் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.