பாலாவின் வணங்கான் படத்துக்கு இவ்வளவு மவுஸா? ஓடிடி அப்டேட்ட பாருங்கப்பா!
Vanangaan: பெரிய போராட்டத்துக்கு பின்னர் வெளியான பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் வித்தியாச படைப்புகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கத்தில் வெளியாகும் எல்லா படங்களுமே அதி பயங்கரமாக தான் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் உருவான திரைப்படம் வணங்கான்.
இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தார். அப்படத்தின் பூஜை நடந்து அதற்கான வேலைகளும் நடத்தப்பட்டது. சில மாதங்களிலேயே நடிகர் சூர்யா தான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து, பல நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய் மூலம் அருண் விஜயை படக்குழு ஹீரோவாக தேர்வு செய்தது. விறுவிறுப்பாக இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடத்தப்பட்டது. தொடர்ந்து படத்தினை பொங்கல் ரிலீஸாக வெளியிட திட்டமிட்டனர்.
இருந்தும் அந்த ரிலீஸ் ரேஸில் அஜித்தின் விடாமுயற்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பாலா தைரியமாக படத்தினை வெளியிட முடிவெடுத்தார். அதை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பாலாவிற்காக பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குனர் பாலா மீது கோபத்தில் சூர்யா இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரும் படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டார். அருண் விஜயுடன் மோதலில் இருந்ததாக கூறப்பட்ட சிவகார்த்திகேயனும் கலந்து கொள்ள படம் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 10ந் தேதி வெளியான இப்படம் நாளை பிப்ரவரி 21 தேதி டெண்ட் கொட்டா ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிடி ரிலீஸ் படத்திற்கு மேலும் வரவேற்பை பெற்று கொடுக்கும் என்ற பேச்சும் கோலிவுட்டில் எழுந்துள்ளது.