ஓடிடியில் இந்த வார சூப்பர் ரிலீஸ்… அட இந்த செம லிஸ்டா இருக்கே! எஞ்சாய்..
OTT Release: தமிழ் சினிமா படங்களில் இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட் குறித்த அப்டேட்டுகள்.
காதலிக்க நேரமில்லை: ரவி மோகன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார்.
சாதாரண காதல் கதைகளை போல இல்லாமல் வித்தியாசமாக சொல்லப்பட்டதால் படம் நல்ல வசூலையே குவித்தது. காதலை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் காதலர் தினத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
எனக்கு தொழில் ரொமான்ஸ்: அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படம் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னரே நிறைய காதல் படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆஹா தமிழில் இப்படம் காதலர் தினத்தினை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
மெட்ராஸ்காரன்: அறிமுக நடிகர் சத்யா, கலையரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் மெட்ராஸ்காரன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
பிரேக்கப் கஹானி: ஆந்தாலஜி விரும்பிகளுக்கு ஏதுவாக காதல், பிரேக் அப் சொல்லும் சீரிஸ் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. காதலர் தினத்தினை முன்னிட்டு இப்படங்கள் எல்லாமே ஏற்கனவே ஓடிடிக்கு வந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.