7 வயதில் இருந்தே கமல் படங்களை பார்த்து ரசித்த நடிகை.. பின்னாளில் கமலுக்கு ஜோடியான சம்பவம்

By :  Rohini
Update: 2024-12-30 13:03 GMT

kamal

உச்சம் தொட்ட கமல்:

தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமல். சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவரின் ஆரம்பகால கனவாக இருந்து வருகிறது. எப்படியாவது தமிழ் சினிமாவை உலகமே திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக புது புது தொழில் நுட்பத்தை தன்னுடைய படங்களில் கையாண்டு வருகிறார் கமல். நிறைய எக்ஸ்பிரிமெண்ட்டுகளை செய்து வருகிறார்.

தற்போது கூட ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள அமெரிக்கா சென்றிருக்கிறார் கமல். அந்த தொழில் நுட்பத்தை சினிமாவில் வேறு வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை கற்றுக் கொள்ளவே அமெரிக்கா சென்று படித்து வருகிறார். இந்த நிலையில் கமலின் படங்களை 7 வயதில் இருந்தே தனியாக திரையரங்கிற்கு சென்று பார்த்து வந்த நடிகை பின்னாளில் கமலுக்கே ஹீரோயினாக மாறிய சம்பவம் பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

கமலுக்கு 125வது படம்:

அந்த நடிகை வேறு யாருமில்லை. நடிகை ஷோபனாதான். ஷோபனா தமிழில் அறிமுகமான திரைப்படம் எனக்குள் ஒருவன். இது கமலுக்கு 125வது படம். ஆனால் ஷோபனாவிற்கு இதுதான் முதல் படம். அதனால் 125 படங்கள் நடித்த ஒருவருக்கு ஜோடியாக போகிறோம் என்று நினைக்கும் போது எப்படி இருந்தது என ஷோபனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷோபனா எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.

ஏனெனில் நான் 7 வயதாக இருக்கும் போதே தனியாக திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து வந்திருக்கிறேன். அப்பொழுது கமல் நடித்த ஏராளமான படங்களை பார்த்து பார்த்து பழக்கப்பட்டவள். எனக்குள் ஒருவன் படத்தில் நடிக்கும் போது பழக்கப்பட்டவர் போலத்தான் கமல் தெரிந்தார். ஆனால் 7 வயதில் இருந்தே பார்த்த நடிகருக்கு ஜோடி என்றதும் அவரை பார்க்கும் போது பேச்சே வரவில்லை என்று கூறியிருந்தார் ஷோபனா.

shobana

அதுமட்டுமில்ல. கரகாட்டக்காரன் படத்தில் கனகாவிற்கு பதில் ஷோபனாதான் நடிக்க இருந்ததாம். ஆனால் என்னால் அப்பொழுது நடிக்க முடியவில்லை என்று பதிலளித்திருந்தார். அதை போல சந்திரமுகி படத்திலும் ரா ரா பாடலுக்கு முதலில் ஷோபனாதான் டான்ஸ் மாஸ்டராக இருக்க வேண்டியதாம். அதுவும் அவரால் பண்ண முடியவில்லை. ஆனால் இதுவரைக்கும் ரா ரா பாடலுக்கு ஜோதிகா ஆடிய நடனத்தை பார்த்ததே இல்லையாம் ஷோபனா. 

Tags:    

Similar News