‘அகிலம் ஆராதிக்க’.. வாடிவாசலுக்கு பிறகு சூர்யாவை பாலிவுட் ஆராதிக்கனுமே.. அப்படி ஒரு விஷயம்
திடீர் அறிவிப்பு: இன்று திடீர் அறிவிப்பாக வாடிவாசல் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அகிலமே ஆராதிக்க வாடிவாசல் திறக்குது என்ற கேப்ஷனோடு தயாரிப்பு நிறுவனம் அந்த நிறுவனத்தை வெளியிட்டிருந்தது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தை சூர்யாவின் வீட்டில்தான் நடந்ததாம். கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன் மற்றும் சூர்யா மூவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்,
மீண்டும் அவர்கள் கூட்டணி: பொங்கல் திருநாள் அதுவுமா இப்படி ஒரு அறிவிப்பு வெளியானது ஒரு பாசிட்டிவ் வைப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வரவேண்டிய திரைப்படம். விடுதலை படத்தின் காரணமாக வாடிவாசல் திரைப்படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் கங்குவா படத்தில் மிகவும் பிஸியாக இருந்தார் சூர்யா. இன்னொரு பக்கம் விடுதலை படத்தில் முழு கவனத்தையும் வெற்றிமாறன் செலுத்தினார்.
புறநானூறு படத்தில் இருந்து விலகல்: எப்படியோ இருவரும் கடைசியாக ஒன்று சேர்ந்து விட்டனர். அதுவும் சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த இரு படங்களையும் முடித்து விட்டு வாடிவாசலில் முழுவதுமாக கவனம் செலுத்த இருக்கிறார் சூர்யா. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் புற நானூறு படத்தில் நடிப்பதாக இருந்து பின் அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகியது அனைவருக்கும் தெரியும்.
இந்தப் படத்திலும் அரசியலா?:அதற்கான பின்னணி காரணம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி புற நானூறு படம் பேசும் என்பதால் அந்த அரசியல் வேண்டாம். பாலிவுட்டில் தனக்கு இடைஞ்சல் வரும் என்பதால்தான் அந்தப் படத்தில் இருந்து விலகினார் சூர்யா. ஆனால் வாடிவாசல் படத்திலும் ஒரு சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறதாம். இந்தப் படத்திலும் அரசியல் இருப்பதாகவும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி இந்தப் படமும் பேசப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி என்றால் வாடிவாசல் படத்தையும் சூர்யா புறக்கணிக்கப் போகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. ஆனால் பல நாள் கனவாக இந்தப் படம் இருப்பதால் கண்டிப்பாக சூர்யா இதில் இருப்பார். ஆனால் வாடிவாசலுக்கு பிறகு பாலிவுட்டில் இவருக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.