இதெல்லாம் அஜித் காதுல விழுந்திருக்கா? விமர்சனங்களால் அவர் எடுத்த சரியான முடிவு

By :  Rohini
Update: 2024-12-13 14:27 GMT

ajith

அஜித்:

அஜித்தை பொறுத்தவரைக்கும் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த இரண்டு படங்கள் இன்னும் பெண்டிங்கில் இருக்கின்றன. இதில் மிகவும் வேகமாக இறங்கி குட் பேட் அக்லி படத்திற்காக ஹைதராபாத்தில் இரண்டு நாள் ஷூட்டிங்கை முடித்து விட்டாராம்.

இப்போது மும்பையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கு ஒரு இரண்டு நாள் ஷூட்டிங் இருக்கிறதாம். இதை முடித்துவிட்டு நேராக விடாமுயற்சி படத்திற்கு வருகிறார் அஜித். பாங்காங்கில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஆனால் அஜித் 4 நாட்கள் தான் கால்சீட் கொடுத்திருக்கிறாராம்.

விடாமுயற்சி நிலைமை:

நான்கு நாட்கள் எனும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனெனில் விடாமுயற்சி படத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டி இருக்கிறது.அதுபோக ஒரு பாடல் காட்சியும் படமாக்க வேண்டி இருக்கிறது. இப்படி இருக்கும்போது நான்கு நாட்களில் எப்படி முடிக்க முடியும் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதனால் இந்த நான்கு நாட்களில் எப்படியாவது எடுத்து முடித்து விட வேண்டும் என அஜித் சொல்லி இருக்கிறாராம். இது எல்லாம் முடிந்து கடைசியில் அங்கேயே இருந்து டப்பிங்கையும் முடிக்க இருக்கிறாராம் அஜித். இதை கேள்விப்பட்டதும் கோடம்பாக்கத்தில் அஜித்தை அனைவரும் வியப்பாக பார்க்கின்றனர்.

இவ்வளவு பரபரப்பாக இருக்கிறாரே அஜித் என பேசி வருகின்றனர். ஆனால் ஏழாம் தேதியிலிருந்து விடாமுயற்சிக்கு கால்சீட் கொடுக்கிறேன் என சொல்லி இருந்தாராம். ஆனால் விடாமுயற்சிக்கு முன்பாக குட் பேட் அக்லியை முடித்துவிட்டு அதன் பிறகு விடாமுயற்சிக்கு போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.

மொத்தமா முடிச்சுடுவோம்:

இப்படி ஒரே முனைப்போடு செயல்பட்டு வருவதற்கு காரணம் மொத்தமாக இரண்டு படங்களின் வேலைகளையும் முடித்துவிட்டு ஒரேடியாக ரேஸில் கவனம் செலுத்தப் போகிறாராம் அஜித் .ரேசுக்கு போன பிறகு ஒரு சின்ன பேட்ச் ஒர்க் இருக்கிறது என சொல்லி யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக ரேஸுக்கு முன்பாகவே படம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தான் அஜித் ரேஸில் கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு வரை ஒரு படத்தில் நடிக்கும் போதே திடீரென படத்தை பிரேக் செய்துவிட்டு ரேஸுக்கு போனார் அஜித். அப்போது ஊடகங்களில் அவரைப் பற்றி வறுத்து எடுத்தனர். இப்படி இடையில் படத்தை கட் செய்து விட்டு ரேஸுக்கு போனால் தயாரிப்பாளரின் நிலைமை என்னவாகும். அதை யோசிக்காமல் இருக்கிறார் அஜித் என அப்போது பல விமர்சனங்கள் அவர் முன் வைக்கப்பட்டது.

இதெல்லாம் இப்போது அஜித் காதுக்கு சென்று இருக்கிறது போல. அதனால் பட வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு ஒரேடியாக ரேஸில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறாராம் அஜித்.

Tags:    

Similar News