நல்ல கதை இருந்தா சொல்லுங்க!.. ரூட்டு போட்ட அமீர்கான்!. எஸ்.கே காட்டுல மழைதான்!...
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கரிங் வேலை செய்து அப்படியே சினிமாவில் நுழைந்தவர். சுலபமாக இவர் சினிமாவில் நுழைந்துவிடவில்லை. ஏனெனில், இவருக்கு உதவ சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தினர் யாருமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர்.
துவக்கத்தில் இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஆங்கரின் வேலை. ஒரு நிகழ்ச்சிக்கு 4500 சம்பளம் கொடுப்பார்கள். இதை அவரே சமீபத்தில் ஒரு விழாவில் சொல்லி இருந்தார். நடிகர் தனுஷுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் நடித்த 3 படத்தில் நடித்தார்.
சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை போன்ற படங்களை தனுஷ் தயாரித்தார். அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் சிவகார்த்திகேயன் டேக் ஆப் ஆனார். சில வருடங்களிலேயே தன்னுடைய சீனியர் நடிகர்களை தாண்டி அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கண்டு பல நடிகர்களும் பொறாமைப்பட்டார்கள். அவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. எனவே, எல்லோரின் பார்வையும் சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பியிருக்கிறது.
ஏற்கனவே முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. தற்போது சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ். அது முடிந்தபின் சிவகார்த்திகேயன் படம் துவங்கவுள்ளது. இப்போது எஸ்.கே சுதா கொங்கரா இயக்கி வரும் 1965 என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'பாலிவுட்டுக்கு போகும் ஆசை இருக்கிறதா?' என்கிற கேள்விக்கு பதில் சொன்ன எஸ்.கே ‘நடிகர் அமீர்கானை சிலமுறை சந்தித்தேன். உங்களின் முதல் இந்தி திரைப்படத்தை நான்தான் தயாரிப்பேன். நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்’ என சொன்னார். அதுவே எனக்கு மிகப்பெரிய கவுரவம்’ என சொல்லியிருக்கிறார்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் அமீர்கான் நடித்துள்ளார்.. இந்த படத்தில் அவருக்கு கேமியோ வேடம் என சொல்லப்படுகிறது. இதுவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.