திட்டமிட்ட சதி.. அல்லு அர்ஜூன் விவகாரத்தில் பயில்வான் ரெங்கநாதன் காட்டம்
அல்லு அர்ஜூன்:
அல்லு அர்ஜூனை திடீரென அவரது வீட்டிற்கே போய் தெலுங்கானா போலீஸ் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புஷ்பா 2 தி ரூல் படத்தின் முதல் நாள் அதிகாலை காட்சியை அல்லு அர்ஜூன் பார்க்க செல்ல அவரை பார்க்க ஏராளமானோர் கூடினர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிரிழந்தார். அவருடன் அந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலை கேஸ் என்ற அடிப்படையில் அல்லு அர்ஜூன் மீது வழக்கு தொடர்ந்து தெலுங்கானா அரசு அவரை கைது செய்தது. இது திட்டமிட்டு நடந்த சதி என பயில்வான் ரெங்கநாதன் கூறியிருக்கிறார். தற்போது தெலுங்கானாவில் நடக்கும் அரசு அல்லு அர்ஜூனுக்கும் அவரது உறவினரான பவன் கல்யாணுக்கும் எதிரான அரசாம். ஏற்கனவே பவன் கல்யாண் ஆந்த்ராவின் துணை முதல்வாராக இருக்கிறார்.
25 லட்சம் கொடுத்தும் பயனில்லை:
பவன் கல்யாணின் சகோதரர் ஒருவர் மத்தியில் அமைச்சராக இருக்கிறாராம். அதனால் பவன் கல்யாணுக்கு எதிராகவே இப்படி அல்லு அர்ஜூன் மீது இப்படி ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கல் என பயில்வான் ரெங்கநாதன் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் 25 லட்சம் கொடுத்தும் அவர் மீது இப்படி ஒரு கேஸை போட்டிருக்கிறார்க்ள் என்றால் இது வேண்டுமென்றேதான் நடந்திருக்கிறது என்று பயில்வான் கூறினார்.
இதில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். பவன் கல்யாணுக்கும் அல்லு அர்ஜூன் மீது மறைமுகமாக ஒரு பகை இருப்பதாக அரசல் புரசலாக பேசி வருகிறார்களாம். ஏனெனில் ஆந்திராவில் பவன் கல்யாண் எப்பேற்பட்ட புகழுடைய நடிகராக இருந்திருக்கிறார். ஆனால் அல்லு அர்ஜூன் அதை விட அதிகமான புகழை இப்போது அடைந்திருக்கிறார் புஷ்பா படத்தின் மூலம் .இதுவரை எந்த நடிகரின் படமும் ஒரு வாரத்தில் 1000 கோடி கலெக்ஷனை அள்ளியது இல்லை.
தடையாக இருக்காது:
ஆனால் அல்லு அர்ஜுன் அந்த சாதனையை முறியடித்திருக்கிறார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் மீது தனிப்பட்ட முறையில் ஒரு வன்மம் பவன் கல்யாணுக்கு இருந்திருக்கலாம். அதை தெலுங்கானா முதல்வரிடம் சூசகமாக பேசி அல்லு அர்ஜூன் மீது வழக்கை தொடர சொல்லியிருக்கலாம் என்றெல்லாம் ஆந்திராவில் ஒரு பேச்சு பரவுவதாக பயில்வான் கூறினார்.
எப்படி இருந்தாலும் இது அல்லு அர்ஜுனுக்கு ஒரு தடையாக இருக்காது. ஏற்கனவே வானளவு உயரத்தை அடைந்திருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் வானுக்கும் மேலான உயரத்தை அடைந்து விட்டார் அல்லு அர்ஜூன் என பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.