நான் தயாரிக்கும் படத்தில் நான்தான் ஹீரோயின்.. மத்தவங்க நிலைமைய யோசிக்கணும்ல

By :  Rohini
Update:2025-02-15 07:00 IST

இன்று காதலர் தினத்தை ஒட்டி ஸ்ரீகாந்த் நடிப்பில் தினசரி என்ற படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தயாரித்தது சிந்தியா. அவர்தான் இந்த படத்தின் ஹீரோயின். இவருடைய கொள்கைப்படி தான் தயாரிக்கும் எந்த படமாக இருந்தாலும் அதில் நான் தான் ஹீரோயினாக நடிப்பேன். வேறு யாரையும் அனுமதிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் .

இவரது ஆசைப்படி தினசரி படத்தில் பாடல்கள் அனைத்தும் எண்பதுகள் காலகட்டத்தில் இருக்கும் பாடல்களைப் போல் வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதற்கு தகுந்த படி இளையராஜாவும் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அது மட்டுமல்ல முதல் சிங்கிள் வெளியானதும் பல வித ட்ரோலுக்கும் ஆளானார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோயினுமான சிந்தியா.

அவருடைய முகத்தை அனைவரும் கேலி செய்து கிண்டல் அடித்தனர். உருவ கேலி நிறைய அவர் மீது சுமத்தப்பட்டது. எத்தனை ட்ரோல்கள் வந்தாலும் அதை தாங்கும் சக்தி எனக்கு உண்டு எனக் கூறி இருக்கிறார் சிந்தியா. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். இப்போது தமிழ் சினிமாவில் படம் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். அதன் பிறகு இந்த தினசரி படத்தை தயாரித்திருக்கிறார். இவர் இந்த படத்தை பற்றி கூறும் பொழுது பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

படத்தின் பூஜை போட்டதுமே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுவாராம் .இந்த படத்தின் ரிலீஸ் தேதிய பிப்ரவரி 14 என சொன்னதும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸாகிறது. அதனால் தியேட்டர் கிடைப்பதில் சிரமம் இருக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கு சிந்தியா நிலநடுக்கமே வந்தாலும் எனக்கு கவலை இல்லை. சொன்ன தேதியில் பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகவேண்டும் என சொல்லி இருக்கிறார். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிசல்ட் என்ன என்பது அனைவருக்குமே தெரியும் .

அதனால் இவருடைய இந்த படத்திற்கு இப்போது தியேட்டர்கள் வர ஆரம்பித்திருக்கிறது என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .சமீபத்தில் இளையராஜாவுடன் இருக்கும் போட்டோவும் ரஜினியுடன் இவர் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அப்போது ரஜினியுடன் இருக்கும்போது உடன் இளையராஜாவும் சிந்தியா அருகில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது ரஜினியும் இளையராஜாவும் சண்டையிட்டுக் கொண்டார்களாம். யார் நடுவில் நிற்பது எந்த பக்கம் நிற்பது என சண்டையிட்டுக் கொண்டார்களாம் .கடைசியில் எப்படியாவது நின்று புகைப்படத்தை எடுத்து விடுவோம் என சொன்ன பிறகுதான் அந்த புகைப்படத்தை எடுத்தோம் என்றும் பேட்டியில் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல படத்தை எடுக்கும் போது நிறைய பணத்தை இழந்திருக்கிறேன் என்றும் கூறி இருக்கிறார். இவர் நடிகை தயாரிப்பாளர் என்பதையும் மீறி ஒரு சிறந்த பாடகியும் கூட. ஆல்பம் பாடல்களை பாடுவதில் சிறந்தவராம். பல ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறாராம்.

Tags:    

Similar News