என்னை மிரட்டினார்கள்!.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்!. மேடையில் புலம்பிய மிஷ்கின்!..
Director myskin : தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் மிஷ்கின். இவர் கதை சொல்லும் பாணியே வித்தியாசமாக இருக்கும். அதோடு, வசனங்களில் கதையை சொல்லாமல் வித்தியாசமான கேமரா கோணங்களில் கதை சொல்வார். இவரின் முதல் படமான சித்திரம் பேசுதடி படம் ஹிட் அடித்தது.
அதன்பின் அஞ்சாதே, பிசாசு, யுத்தம் செய், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பாடகி ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியை வைத்து டிரெய்ன் என்கிற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இந்த 2 படங்களுமே இன்னும் வெளியாகவில்லை.
பாட்டில் ராதா: கடந்த சில வருடங்களாகவே மிஷ்கின் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவே நடித்திருந்தார். இப்போது பெரும்பாலான படங்களில் அவரை பார்க்க முடிகிறது. ஒருபக்கம் எல்லா சினிமா விழாக்களிலும் கலந்துகொண்டு சர்ச்சையாக பேசி வருகிறார். அவன், இவன், வாடா போட்டா, சில கெட்டவார்த்தைகள் என மிஷ்கின் பேசினால் விழா களைகட்டுவதோடு, அதுவே படத்திற்கு புரமோஷனாக அமையும் என கருதி பலரும் இவரை அழைக்கிறார்கள்.
இளையராஜா: அப்படித்தான் சமீபத்தில் பாட்டில் ராதா என்கிற பட விழாவில் பேசியபோது ‘இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான். அவனாலதான் பலபேரு குடிக்கு அடிமையானான்’ என பேசியதோடு அவ்வப்போது சில கேட்ட வார்த்தைகளையும் பேசினார். மேடையில் இருந்த வெற்றிமாறன், ரஞ்சித், அமீர் போன்றவர்கள் கூட அவர் பேசியதை அங்கே கண்டிக்காமல் அவரின் பேச்சை ரசித்தனர்.
அருள்தாஸ்: இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. ‘மிஷ்கின் தொடர்ந்து இப்படி பேசி வருகிறார். அவரை எல்லோரும் கண்டிக்க வேண்டும். மேடையில் இருந்த பெரிய இயக்குனர்களும் அவரை கண்டிக்காமல் அவரின் பேச்சை ரசித்தது தவறு’ என சினிமா பத்திரிக்கையாளர்கள் சொன்னார்கள். மேலும், ஒரு விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் ’மிஷ்கின் மிகவும் தவறாக பேசியிருக்கிறார். எல்லோரையும் வாடா போடா என்கிறார். பல ஆயிரம் புத்தகம் படித்த அறிவாளி என தன்னை சொல்லிக்கொள்ளும் அவர் மிகவும் இழிவாக பேசுகிறார். நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?. வெளிநாட்டு படங்களை காப்பியடித்து படமெடுக்கும் போலி அறிவாளி’ என மிஷ்கினை கண்டித்தார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்: இந்நிலையில், ஒரு சினிமா விழாவில் பேசிய மிஷ்கின் ‘என்னுடைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்த நாள் இரவு ரிலீஸ் ஆனது. எனக்கு நெருக்கமான ஒரு பெரிய இயக்குனர் இந்த படத்திற்கு உனக்கு அதிகவிலைக்கு தொலைக்காட்சி உரிமையை விற்று தருகிறேன்’ என சொல்லி அழைத்து சென்றார்.
ஒரு அறையில் 20 பேர் இருந்தார்கள். வெறும் 75 லட்சம் தருகிறோம் என்றார்கள். ஐயா இது நல்ல படம். 2 கோடியாவது கொடுங்கள் என கேட்டேன். ஒருகட்டத்தில்தான் 20 பேரை வைத்து என்னை அவர்கள் மிரட்டுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். அவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அவர்கள் கொடுத்த செக்கை அவர்கள் முன்பே கிழித்து போட்டேன். ‘நான் சென்னை வரும்போது ஒரு பேப்பரையும், பேனாவையும்தான் எடுத்துவந்தேன். நான் மேலே வருவேன்’ என சொல்லிவிட்டு வந்தேன்.
இதுவரை 80 முறை அந்த படம் அந்த சேனலில் ஒளிபரப்பாகியிருக்கிறது. அந்த 20 பேரில் 4 பேர் இறந்துவிட்டார்கள். அந்த இயக்குனர் மட்டும் இன்னும் இருக்கிறார். இப்படி எல்லா விஷயத்திலும் துரோகங்களை பார்த்தவன் நான். மன்னிப்பு கேட்க யோசிக்கவே மாட்டேன். இப்படி பேசினாலாவது படம் மக்களிடம் ரீச் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி பேசினேன். உங்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு உங்களை கடவுள் ஆக்குகிறேன்’ என அழுவது போல பேசியிருக்கிறார்.