பவதாரணி நினைவேந்தலில் இப்படி ஒரு விஷயம் நடந்துச்சா? 12 லட்சம் கேட்டது யாரு?..

By :  Rohini
Update:2025-02-14 16:29 IST

பவதாரணி நினைவேந்தல்: கடந்த 12ஆம் தேதி பாடகி பவதாரணி பிறந்தநாள் என்பதால் அவரின் ஞாபகமாக மியூசிக் அகாடமியில் இளையராஜா ஒரு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் என பவதாரணிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் கலை உலகில் முக்கியமானவர்கள் என கலந்து கொண்டனர். பவதாரணி பாடிய ஒரு பாடலை அந்த மேடையில் பாடும் போதே பின்னாடி இருந்த கார்த்திக் ராஜா கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார்.

இசையமைப்பாளர் பவதாரணி: அது அங்கிருந்தவர்களை மிகவும் கஷ்டமாக்கியது. இது ஒரு பக்கம் இருக்க பவதாரணி கடைசியாக ஒரு படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பெயர் புயலில் ஒரு தோணி .இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த யூனிட்டும் பவதாரணிக்காக இப்படி ஒரு விழா நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும் இளையராஜாவின் மேனேஜரை தொடர்பு கொண்டு அவர் இசையமைத்த படத்தின் ஆடியோ விழாவையும் சேர்த்து அங்கு வைக்க ஆசைப்படுகிறோம் என கூறி இருக்கிறார்கள்.

12 லட்சமா?: அவரும் ஓகே என்று தான் சொல்லியிருக்கிறார். அதற்கு ஏற்ப எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்ததாம். ஆடியோ வெளியீட்டு விழா என்றால் பெரிய அளவில் இல்லை. கேசட் வெளியீடு மற்றும் அந்த படத்தின் பாடல்கள் சம்பந்தப்பட்ட ஏவி இவைகளை மட்டும் போட்டு முடித்து விடலாம் என்று தான் நினைத்து இருக்கிறார்கள். விழாவும் நெருங்கிக் கொண்டிருக்க இளையராஜாவின் மேனேஜருக்கு ஒரு உதவியாளர் இருக்கிறாராம்.

அவர் திடீரென படக்குழுவை அழைத்து இந்த மாதிரி ஆடியோ விழாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றால் 12 லட்சம் செலவாகும் என சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டதும் புயலில் ஒரு தோணி படத்தின் பட குழுவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இந்த விஷயத்தை அப்படியே வெங்கட் பிரபுவின் காதுக்கு இவர்கள் கொண்டு போயிருக்கிறார்கள். அவர் இளையராஜாவின் மேனேஜரை அழைத்து பவதாரணி இசையமைத்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதற்கு 12 லட்சம் கேட்டீர்களாமே என சத்தம் போட்டு இருக்கிறார்.

வெங்கட் பிரபு தலையீட்டால் நடந்த சம்பவம்: அதன் பிறகு அந்தப் படத்தின் ஆடியோ விழாவும் இந்த நினைவேந்தலில் நடந்திருக்கிறது. ஆனால் இதில் நடந்த டிவிஸ்ட் என்னவென்றால் கேசட்டை இளையராஜா மூலமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த படத்தில் அமைந்த பாடல்களின் ஏவியை ஒளிபரப்பும் போது டெக்னிக்கல் பிரச்சனையாக பாடல்களை ஒளிபரப்ப முடியவில்லை. இது வேண்டுமென்றே நடந்த செயலா? இல்லை எதேச்சையாக நடந்த செய்யலா? என அனைவரும் கேட்டு வருகின்றனர்.


இன்னொரு பக்கம் பண விஷயத்தில் ஏற்கனவே இளையராஜாவிற்கு ஒரு பெயர் இருக்கிறது. ஒரு வேளை அவர் கேட்டு தான் இந்த மாதிரி நடந்திருக்குமா என்ற வகையில் பார்த்தாலும் தன் சொந்த மகளின் கடைசி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எனும் போது அவர் இந்த மாதிரி பணம் கேட்டிருக்க மாட்டார் என்றும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இருந்தாலும் இந்த தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ பல நல்ல நல்ல பாடல்களை கொடுத்தவர் பவதாரணி .அதில் மிகவும் முக்கியமானது மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் .அது இன்றுவரை கேட்பவர்களுக்கு ஒரு வித இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றன .அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய இழப்பாகும்.

Tags:    

Similar News