‘ஜனநாயகன்’ பட எடிட்டருக்கு இந்த நிலைமையா? ஒரு வார்த்தையில் முடிச்சுவிட்ட விஜய்
நடிகர் விஜய்: விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு வந்து அவர் நடிக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இந்த படம் இருக்கிறது. அதுவும் விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையிலும் இந்த படத்தில் ஏதாவது ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஏற்கனவே விஜய் படம் ரிலீசானால் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகும். அதுவும் அரசியல் தரப்பில் இருந்து பல பிரச்சனைகள் அவருடைய படத்திற்கு இதுவரை வந்திருக்கின்றன. ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் இவர் அரசியலுக்கு வந்து வெளியாகும் திரைப்படம் என்பதால் முன்பை விட பெரிய அளவில் ரிலீசில் ஏதாவது பிரச்சனை வரும் என்றும் சொல்லப்படுகிறது.
என்ன இருந்தாலும் எல்லாத்தையும் எதிர்கொள்ள தயார் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் விஜய். அது அவருடைய பேச்சிலேயே தெரிகிறது. தனது கட்சியை தொடங்கி மாநாட்டில் பேசிய பேச்சு பரந்தூரில் மக்கள் முன் பேசிய பேச்சு என ஒரே பரபரப்பில் தான் இருக்கிறார் விஜய். இந்த நிலையில் படத்தில் எடிட்டராக வேலை செய்பவர் பிரதீப். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு இவர் எடிட்டராக பணிபுரிந்து இருக்கிறார்
கோமாளி திரைப்படத்திற்கும் இவர்தான் எடிட்டர். எச் வினோத்துடன் எப்படியாவது ஒரு படத்தில் இணைய வேண்டும் என்பதுதான் இவருக்கு ஆசையாம். வலிமை திரைப்படத்திலும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். துணிவு படத்திலும் எதிர்பார்த்து இருந்திருக்கிறார். ஆனால் எந்த படத்திலும் வினோத்தை இவரால் நெருங்க முடியவில்லை. அதன் பிறகு தான் ஜனநாயகன் திரைப்படத்தில் எடிட்டராக பணிபுரிய வாய்ப்பு வந்தது என ஒரு பேட்டியில் கூறினார்.
இவர்தான் இந்த படத்திற்கு எடிட்டர் என தெரிந்ததும் இவருடைய இணையதள பக்கத்தை டேக் செய்து ரசிகர்கள் ‘இது தளபதிக்கு கடைசி படம் .ஒழுங்கா பார்த்து பண்ணு’ என மிரட்டும் தொணியில் கமெண்ட்களை கூறி இருக்கிறார்கள். இதை ஒரு முறை விஜயை சந்தித்தபோது பிரதீப் விஜயிடம் உங்களுடைய ரசிகர் ஒருவர் என்னை இப்படி மிரட்டி இருக்கிறார் என கிண்டலாக கூறினாராம். இதை கேட்டதும் விஜய் சிரித்து விட்டாராம் .இருந்தாலும் அதெல்லாம் மனதில் போட்டு குழப்பாதீர்கள். உங்களுடைய திறமை எதுவோ அதை மட்டும் வெளிப்படுத்துங்கள். மத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும் என அறிவுரை சொன்னதாக பிரதீப் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.