எல்லா கெட்ட வார்த்தையும் படத்துல இருக்கே!. வெளியான விடுதலை 2 சென்சார் சர்ட்டிப்பிகேட்!..
Viduthalai 2: சினிமாவில் அறிமுகம்: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் வெற்றி மாறன். பாலுமகேந்திரவிடம் சினிமா கற்றுக்கொண்டவர். பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. எனவே, தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வெற்றி மாறன் பார்க்கப்பட்டார்.
நாவலிலிருந்து சினிமா: நாவலை திரைப்படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் வெற்றிமாறன். இதுவரை அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலானவை நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவைதான். ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனக்கு ஆந்திர போலீஸ் மூலம் கிடைத்த அனுபவங்களை வைத்து எழுதிய நாவலை வைத்து விசாரணை படத்தி எடுத்தார் வெற்றிமாறன். அந்த படமும் விமர்சனரீதியாக பாராட்டை பெற்றது. ரசிகர்களிடம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
வட சென்னை: அதன்பின் தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்கினார். இந்த படத்தில் இயக்குனர் அமீருக்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து பின்னர் அவருக்கு பதில் அமீர் நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும், ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
விடுதலை: அதன்பின் தனுஷை வைத்து அசுரன் படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு தனுஷுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. இந்த படம் தனுஷின் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் சூரியை ஹீரோவாக போட்டு வெற்றி மாறன் இயக்கிய படம்தான் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி சில காட்சிகளில் மட்டுமே வருவார். அவரை எல்லோரும் வாத்தியார் என்றே அழைப்பார்கள். அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்பின் தலைவர் போல விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
விடுதலை 2: இந்நிலையில், வாத்தியார் வேடத்தின் பின்னணி, அவர் எப்படி அரசுக்கு எதிராக மாறினார் என்பதை விடுதலை 2ம் பாகத்தில் காட்டியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். பாடலில் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
சென்சார் கெடுபிடி: வருகிற 20ம் தேதி விடுதலை 2 படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில், அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் வரும் ஒரு வசனத்தை நீக்குமாறு தணிக்கை குழு அதிகாரிகள் சொல்ல வெற்றிமாறன் ஏற்கவில்லை. அப்படியெனில் A சான்றிதழ்தான் கொடுப்போம் என சொல்ல தாராளமாக கொடுங்கள் என சொல்லிவிட்டாராம்.
ஆபாச வசனங்கள்: இந்நிலையில், விடுதலை 2 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 172 நிமிடங்கள் 38 வினாடிகள் ஓடுகிறது. மொத்தம் 7 இடத்தில் கட் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பல காட்சிகளிலும் வசனங்களை மியூட் செய்திருக்கிறார்கள். சில வசனங்களை மாற்ற சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக கோபத்தில் பேசப்படும் எல்லா கெட்டவார்த்தைகளையும் இந்த படத்தில் பேசி இருக்கிறார்கள். அது எல்லாம் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் எல்லாத்தையும் மியூட் செய்தபிறகு எதற்கு A சர்ட்டிப்பிகேட் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.