தக் லைஃப்ல தன்னோட கேரக்டர் பற்றி சொன்ன சிம்பு... அட செம மாஸா இருக்கே!
தக் லைஃப் படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கின்றன. பர்ஸ்ட் சிங்கிள் ஜிங்குச்சா, டிரெய்லர், செகண்ட் சிங்கிள் சுகர் பேபி, அடுத்து ஆடியோ லான்ச், துபாய் புரொமோ என அடுத்தடுத்த அப்டேட்கள் காத்திருக்கின்றன. ஜூன் 5ல் படம் ரிலீஸ் ஆவதால் கடந்த சில நாள்களாகவே யூடியூப் சேனலில் எங்கு பார்த்தாலும் தக் லைஃப் குழுவினரைக் காண முடிகிறது.
அதிலும் கமல், திரிஷா, அபிராமி, சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் என பலரும் குழுவாகவும், தனித்தனியாகவும் பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு இணையான ஒரு சூப்பர் ரோல் சிம்புவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தனை நாள் இதற்காகத் தான் காத்திருந்தேன் என்பதைப் போல லட்டு மாதிரி அவர் சாப்பிட்டுள்ளார் என்றே தெரிகிறது. அந்தக் கேரக்டரைப் பற்றி முதன்முறையாக சிம்பு வாய் திறக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
தக் லைஃப்ல சிம்பு நடித்தது குறித்து நீங்க நல்லவரா, கெட்டவரா? இந்தப் படத்துல மட்டும் இல்ல. பொதுவா கேட்குறேன்னு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கேட்கிறார். அதற்கு சிம்பு ஒரு பெய்ன் ஃபுல் கேரக்டர்னு சொல்லலாம். வலி இருக்குற கேரக்டர். அதைக் கெட்டவனாகவும் பார்க்கலாம். நல்லவனாகவும் பார்க்கலாம். கத்தி மேல நடக்குற கேரக்டர் என்கிறார் சிம்பு.
பொதுவா கேங்ஸ்டர் படம்னாலே அதுல ஒவ்வொரு கேரக்டருக்கும் ஏற்ற மாதிரி அதுல சினிமாத்தனம் இருக்கும். ஆனா இந்தப் படத்துல ரியாலிட்டியா கேங்ஸ்டர் எப்படி இருப்பாங்களோ அதைக் கொண்டு வந்துருக்காருன்னு நான் நினைக்கிறேன் என்றார் சிம்பு.
கமலின் வளர்ப்பு மகனாக வரும் சிம்பு அடுத்தடுத்த காட்சிகளில் கமலுக்கே எதிராகத் திரும்புவது போல தெரிகிறது. படத்தின் டிரெய்லரைப் பார்த்தால் கடைசியில் கமலுக்கே எமன் சிம்புதான் போல என வில்லத்தனத்தைக் காட்டுகிறார். இருவரும் சேர்ந்து ஆடியதைத் தான் ஜிங்குச்சாம் பாடலில் பார்த்துள்ளோம். ஆனால் மோதியும் இருக்கிறார்கள் என்பதால் படம் ஹைப்பை அதிகரித்துள்ளது.