ஜெயிலரில் வொர்க் அவுட்டான செண்டிமெண்ட்.. ஜெயிலர் 2விலும் நடக்குமா? களமிறங்கும் அந்த நடிகை

By :  Rohini
Update: 2024-12-27 11:01 GMT
coolie

கூலி:

தற்போது ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகத் தான் தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கிராப்ட் பார்த்தாலே எப்படிப்பட்ட படங்களை அவர் இயக்கி இருக்கிறார் என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏற்கனவே மாஸ் ஹீரோவான ரஜினிக்கு எப்படிப்பட்ட ஒரு தரமான ஆக்சன் படத்தை லோகேஷ் உருவாக்குவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஏற்ற வகையில் படத்தில் எண்ணற்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். உபேந்திரா, நாகர்ஜுனா ,சத்யராஜ் என பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாள் அன்று கூலி திரைப்படத்தின் ஒரு சிறிய கிளிப்ம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜெயிலர் 2:

அந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் கே ஜி எஃப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக கண்டிப்பாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரஜினியுடன் முதன்முதலாக ஸ்ரீநிதி செட்டி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிதி செட்டியை பொருத்தவரைக்கும் கே ஜி எஃப் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தில்தான் நடித்திருந்தார். அதன் பிறகு இப்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணைகிறார். இதில் இன்னொரு தகவல் என்னவெனில் ஜெயிலர் படத்திற்கு எப்படி தமன்னாவின் காவாலா பாடல் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியதோ அதே மாதிரி இந்த படத்திலும் மறுபடியும் தமன்னாவை பயன்படுத்தலாமா? என படக்குழு யோசித்து வருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஒன்றரை கோடியா?



காவாலா பாடல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. இந்த ஒரு சென்டிமென்டை வைத்து தான் தமன்னாவை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என முயற்சித்து வருகிறார்களாம். ஏற்கனவே ஜெயிலர் படத்திற்கு அந்த ஒரு பாடலுக்கு தமன்னா ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. படத்தில் நடிக்க அழைத்தால் அவருடைய சம்பளம் மீண்டும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல அந்த பாடலில் அவர் ஆடுவதற்கு உடனே கால்ஷீட் கொடுக்கவில்லையாம். அவருக்காக ரஜினிகாந்த் காத்திருந்து அதன் பிறகு தான் அந்த பாடலையே படமாக்கி இருக்கிறார்கள். பின்நாளில் அந்த பாடல் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்பதை அறிந்த தமன்னா கொஞ்சம் வருத்தப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அதனால் ஜெயிலர்2 படத்தில் தமன்னாவும் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. மற்றபடி மோகன்லால் சிவராஜ்குமார் என அந்த நடிகர்கள் படங்களில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News