நேரா வாங்க.. ஃபைட்னா என்னனு சொல்றேன்! விடாமுயற்சி பற்றி பிஸ்மியின் கருத்துக்கு சுப்ரீம் சுந்தர் பதிலடி

By :  Rohini
Update:2025-02-08 14:07 IST

விடாமுயற்சிக்கு வந்த வினை: விடாமுயற்சி படம் ரிலீஸாகி இதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஒரு ஹாலிவுட் தரத்தில் ஒரு சாதாரண கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது. ஆனால் படத்தில் சண்டைக் காட்சிகளே சரியில்லை என்றும் சுப்ரீம் சுந்தருக்கு ஒரு ஃபைட்டை டிசைன் பண்ண தெரியவில்லை என்றும் வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுப்ரீம் சுந்தரே ஒரு பேட்டியில் விளக்கமாக தெளிவுபடுத்தியிருக்கிறார். இதோ அவர் கூறியது:

சுப்ரீம் சுந்தர் கொடுத்த விளக்கம்: காலைல ஒரு விமர்சனம் பார்த்தேன். மூணு பேரு மூலையில் உட்கார்ந்து பேசுவாங்க. அது மாதிரி பேசுறவங்க ஃபைட் டிசைனே பண்ண தெரியல சுப்ரீம் சுந்தருக்கு என்று சொன்னார்கள். அதை கேட்கும் போது ரொம்பவும் சில்லியா இருக்கு. அது தெரியாமலா ஒரு ஆக்சன் டைரக்டரா வந்துருக்கேன். உங்களை நான் சொல்லும் போது உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் .அது மாதிரி தானே எனக்கும் வரும்.

சாதாரண ஹீரோ: ஏன்னா உழைச்சிருக்கோம். சும்மா ஒன்னும் வரல நாங்க. கதையை உள்வாங்கிக் கொண்டு இந்த கதைக்கு ஹீரோ உடைய ஒரு மீட்டர் இவ்வளவு தான். இவர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் ஒன்னும் ஒரு சிபிஐயோ சிஐடி ஆபிஸரோ கிடையாது. எப்படி போனாங்க. கார் டயர் சேம்பில்ஸ் எடுத்து எப்படி அவர்களை கண்டுபிடிக்கலாம் என்ற அளவுக்கு யோசிக்கும் ஒரு பெரிய ஆபிசர் கிடையாது இந்த படத்தின் ஹீரோ.

அமெரிக்கா போனாலும் இப்படித்தான்: அந்த மாதிரி படமும் இது கிடையாது. அஜர்பைஜானுக்கு எதுக்கு போனாங்கன்னு தெரியல என்று கூட விமர்சித்தார்கள். அஜர்பைஜானுக்கு போகாம அமெரிக்கா போனா கூட இப்படித்தான் குறை சொல்லிட்டு இருப்பாங்க. அதனால உனக்கு பதில் சொல்லவே முடியாது. குறை சொல்லணும்னு நினைச்சுகிட்டு தான் நீங்க வர்றீங்க. நீங்க கண்ணாடிய பாத்து எச்சில் துப்புர மாதிரி தான் இருக்கு .


சினிமா துறையில் தவறை சொல்லுவது தவறு கிடையாது. படத்தை பார்த்து தவறு இது என சொல்லுவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஏன்னா உங்களிடம் ஒரு நல்ல வளர்ச்சி இருக்கிறது. சொன்னால் நான் திருத்திப்பேன். ஆனா இவருக்கு ஒண்ணுமே தெரியாது. ஒண்ணுமே எடுக்க தெரியல என்று சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். படத்தில் பாசிட்டிவ் ஒரு பத்து இருக்கு. அதே மாதிரி நெகட்டிவ் மூன்று இருக்கு .

அந்த மூன்று நெகட்டிவ் வைத்து மட்டுமே தொங்கிக்கிட்டு இருக்காங்க. ஏன் அந்த பாசிட்டிவ் பற்றி பேசவே மாட்டீக்காங்க. அதை யாரும் சொல்லுவதில்லை. டிசைன் பண்ண தெரியாமலா இந்த பைட்டை இவ்வளவு பேரு பாராட்டி பேசிகிட்டு இருக்காங்க. வேண்டுமென்றால் என்கிட்ட வரட்டும். நான் எப்படி பைட்டை டிசைன் பண்ணனும்னு அவருக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என பிஸ்மி சொன்ன கருத்துக்கு சுப்ரீம் சுந்தர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

Tags:    

Similar News