கேட்டது டிங்..டாங்.. ஆனா கிடைச்சது? ‘விடாமுயற்சி’ பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோவை கேட்டு ரசிகர்கள் குமுறல்
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது துணிவு படத்திருக்கு பிறகு இவருடைய அடுத்த படம் வெளிவந்து. துணிவு படத்தின் மாபெரும் வெற்றி உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தில் கமிட்டானார் அஜித். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
ஆனால் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனம் இவர்களுக்கு இடையேயான ஒரு முரண்பாடால் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதிலிருந்து அந்த படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தன. கிட்டத்தட்ட படத்தின் அறிவிப்பு வெளியாகி ஆறு மாதம் கழித்து தான் படப்பிடிப்பே ஆரம்பமானது.அது தான் மகிழ்திருமேனி இயக்க விடாமுயற்சியாக உருவெடுத்தது.
இப்போதுதான் அந்த படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் என படக்குழு தெரிவித்திருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவிட்டது. ஆனால் இன்னும் அந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் நிகழலாம் எனக் கோடம்பாக்கத்தில் ஒரு கருத்தும் பரவி வருகிறது. படத்தின் டீசர் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. ஹாலிவுட் தரத்தில் வெளியான விடாமுயற்சி படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதிலிருந்து ட்ரெய்லரை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்க இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகி இருக்கிறது. லிரிக்கல் விடியோ வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஆடியோவை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதை கேட்ட ரசிகர்கள் தங்கள் குமுறலையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அஜித் த்ரிஷா என்றாலே டிங் டாங் கோயில் மணி என்ற அந்த அழகான காதல் பாடல்தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் இந்த பாடலை கேட்கும் போது குலேபகாவலி படத்தில் பிரபுதேவா ஆடும் குலேபா பாடல் மாதிரி இருக்கிறது.
இந்த பாடலில் எங்கு ரொமான்ஸ் இருக்கிறது? என்ன அனிருத் இப்படி பண்ணீட்டிங்கனு ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என ஒரு தகவலும் பரவி வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. அது மட்டுமல்ல இந்த பாடலை தான் படமாக்க சமீபத்தில் பட குழு அஜர்பைஜானுக்கு சென்றது.
அதில் தான் அஜித் மிகவும் ஸ்லிம்மாக இருப்பது போல அந்த புகைப்படமும் வெளியானது .இந்த நிலையில் நேற்று இந்த பாடல் குறித்த அப்டேட்டை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். சவதீகா என ஆரம்பிக்கும் இந்த பாடல் வரிகளை குறிப்பிட்டு ரசிகர்களுக்காக அந்த அப்டேட்டை கூறியிருந்தார். இந்த பாடலை அந்தோணி தாசன் பாட அறிவு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
அஜித் திரிஷா இணைந்தாலே அது மிகப்பெரிய வெற்றி தான். இவர்கள் காம்போவில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த லிஸ்டில் இந்த பாடலும் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதோ அந்த ஆடியோ லிங்க்: https://t.co/60oicGzzmj