கோஷம் வேண்டாம் என சொன்ன அஜித்.. விஜயால் ஏன் சொல்ல முடியல? இதான் காரணமா?

By :  Rohini
Update: 2024-12-17 01:30 GMT

ajithvijay

அஜித்தே கடவுளே என்ற கோஷம் தனக்கு மிகவும் கவலையளிக்கிறது. அதனால் பொது இடங்களிலும் விழாக்களிலும் இது போன்று கத்தி யாரும் பிறரை துன்புறுத்தவேண்டாம். அதோடு என் பெயரை வைத்து மட்டும் அழைத்தால் போதும் என அஜித் அவருடைய ரசிகர்களுக்கு அறிக்கை விட்டிருந்தார். அவர் சொன்ன பிறகு இப்போது அந்த கோஷம் குறைந்ததாகத்தான் தெரிகிறது.

ஆனால் இந்தப் பக்கம் விஜய் என்று அழைக்கவேண்டாம். இனி தளபதி என்றே அழைக்க வேண்டும் என விஜய் சொன்னது பெரும் ட்ரோலாக மாறியிருக்கிறது. அஜித் சொன்னதை போல் விஜய் ஏன் அவருடைய ரசிகர்களுக்கு இந்த மாதிரியான ஆலோசனைகளை வழங்குவதில்லை என்பதற்கான காரணத்தை வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது:

அஜித் வெளியிட்ட அறிக்கை மாதிரி விஜய்யிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். வெறும் நடிகராக மட்டும் இருந்திருந்தால் அடடா அஜித் இந்த விஷயத்தை முன்னெடுத்து போகிறார். நாமும் செய்வோம் என்ற எண்ணம் வர வாய்ப்பு இருக்கிறது. இது என்னுடைய யூகம்தான். ஆனால் இன்று அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

அரசியலில் இந்த மாதிரி வெற்று கோஷங்களும் வீணாப்போன பில்டப்களும் ரொம்ப ரொம்ப முக்கியம். அரசியலில் வெறுமனே விஜய் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னால் அது அரசியலுக்கு சரிப்பட்டு வராது. அரசியலில் நாம் காலம் காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தலைவருக்குமே ஒரு அடைமொழி இருக்கத்தான் செய்கிறது. அடைமொழி இருந்தால்தான் அவர் அரசியல் கட்சியின் தலைவர் என்பது மாதிரியான ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டது.

ஏன் சமீபத்தில் கூட அரசியலுக்கு வந்த உதயநிதி கிட்டத்தட்ட அரை டஜனுக்கும் மேலாக அடைமொழிகளை வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்ற ஆசையுடன் அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் சீக்கிரமாக இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பண்ணிட மாட்டார். அதனால் தளபதி என்கிற அடைமொழி ,ரசிகர்கள் தனக்காக கோஷம் போடுவது என இதை எதையும் அவரால் இப்பொழுது தடை போட முடியாது.

இது அரசியலுக்கு மிகவும் தேவையான ஒன்று. அதனால் அஜித் மாதிரி அவர் ரசிகர்களுக்காக அந்த மாதிரி அறிவிப்புகளையும் கருத்துகளையும் சொல்ல மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் என்னை பொருத்த வரைக்கும் விஜய் இந்த விஷயத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போது அனைவரின் கேள்வியாக இருப்பதும் இதுதான். அஜித் இதை சொல்லிட்டார். ஏன் விஜய்யால் சொல்ல முடியல என்பதுதான்.

அதனால் அஜித் மாதிரி இவரும் ஒரு அறிக்கையோ கருத்தையோ சொல்லும்போது இவருக்கு மேலும் அது பிளஸாகத்தான் அமையும். தளபதி என அழைப்பதை விட தளபதி வேண்டாம் என்று விஜய் சொல்லும் போது தான் அவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

Tags:    

Similar News