மயிலாப்பூரில் அஜித் பட ஷூட்டிங் நடந்தப்போ.. ஓ புரோமோஷனை தவிர்க்க இதான் காரணமா?
அஜித்:
ஒரே ஒரு அறிக்கை. மக்கள் மனதில் மீண்டும் நன் மதிப்பை பெற்றார் அஜித். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகில் இருக்கும் சில பிரபலங்களும் அஜித்தை பாராட்ட ஆரம்பித்தனர். சமீபகாலமாக தன் பெயருடன் கடவுளே என்ற முன்னொட்டை சேர்த்து கூப்பிடுவது தனக்கு கவலையை ஏற்படுத்தியது. அதனால் இனி அப்படி அழைக்கவேண்டாம். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்முறையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றவாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு ரசிகர்களை அடக்கினார் அஜித்.
யாருக்கும் இல்லாத அளவில் அஜித் மீது ரசிகர்கள் வெறிகொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு அஜித்தும் ரசிகர்களை அடிக்கடி சந்திப்பதுமில்லை. உரையாடுவதுமில்லை. ஏன் ரசிகர் மன்றத்தையும் கலைத்தாலும் அவருக்காக ஆங்காங்கே அஜித் பெயரை சொல்லி ஏதாவது ஒரு வகையில் அஜித் ரசிகர்கள் சமூக சேவை செய்வதை பார்க்க முடிகிறது.
ரசிகர்களுக்கான அறிவுரை:
அஜித்தை பொறுத்தவரைக்கும் ஒரு ரசிகராக படத்தை பார். ஆனால் எப்போதுமே ரசிகராக இருக்காதே என்பதுதான் அவருடைய அறிவுரை. ஆனால் ரசிகர்கள் அவர் சொல்வதை கேட்பதாக இல்லை. இப்போது கூட கடவுளே அஜித்தே என்று கோஷமிட வேண்டாம் என்று சொல்லியும் கடவுளே என்பதை மட்டும் எடுத்துவிட்டு அஜித்தே அஜித்தே என்று கோஷமிட்டு வருகின்றனர்.
இப்படி கட்டுக்கடுங்காமல் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில் அஜித் இதுவரை அவர் நடித்த எந்தவொரு படத்தின் புரோமோஷனுக்கும் வந்ததில்லை. ஏன் ஒரு படத்திற்கு அக்ரிமெண்ட் ஒப்பந்தமாகிறது என்றால் அதில் அஜித் புரோமோஷனில் கலந்த் கொள்ள முடியாது என்று கண்டீசன் போட்டுத்தான் படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்வார்.
புரோமோஷன் நோ:
அது ஏன் என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மயிலாப்பூரில் நடந்த ஒரு சம்பவம்தான் முதற்காரணம் என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு படத்தின் படப்பிடிப்பு மையிலாப்பூரில் நடந்ததாம். மாலை 7 மணிக்கு சூட்டிங். அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் மாலை 5 மணியிலிருந்தே அங்கு கூடி விட்டார்களாம்.
சுமார் இரண்டு லட்சம் பேர்:
இதனால் மயிலாப்பூர் முழுவதும் ஒரே டிராஃபிக்காம். சுமார் இரண்டு லட்சம் பேர் கூடிவிட்டார்களாம். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும் திணறிவிட்டார்களாம். அதிலிருந்தே அஜித் வெளியில் வருவதை தவிர்த்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.