விக்ரம், ஜெய்லருக்கு அப்புறம் என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க!.. அடுத்த லிஸ்ட் ரெடி.. களமிறங்கும் மூன்று நடிகர்கள்..

by amutha raja |
kannappar movie
X

தமிழ் சினிமாவில் அடுத்த மாநில ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது என்பது சமீபத்தில் பிரபலமாகி இருக்கிறது. இவை அனைத்தும் அம்மாநில மக்களை அப்படத்தினை பார்க்க வைப்பதற்கு படக்குழு போடும் ஒரு திட்டமாகும்.

கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன் தனது நடிப்பு திறமையை மிக அழகாக வெளிகாட்டினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் முதல் இடத்தை பிடித்திருந்தது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பகத் பசில், காளிதாஸ் போன்ற பிறமொழி நடிகர்களும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: தெரிந்தே பாதாள குழியில் குதிக்கும் வடிவேலு!.. எல்லாம் மாமன்னன் ஹிட் கொடுத்த நம்பிக்கை!…

அதைபோல இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம்தான் ஜெயிலர். இத்திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது. இத்திரைப்படத்திற்கு பின் வெளி மாநில முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குவது புதிய டிரெண்டிங் ஆகி விட்டது. ஆனால் இப்படங்களும் வெற்றியடைந்தும் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதைபோல் தற்போது தெலுங்கு சினிமாவின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மோகன் பாபுவின் மகன் விஷ்னு மன்சு தற்போது இதே ஸ்டைலில் படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு கண்ணப்பர் என்ற பெயரையும் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…

இப்படத்தில் சிவராஜ்குமார், பிரபாஸ், மோகன்லால் போன்ற பிரபலங்கள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இது இந்து கடவுளான சிவனின் கதை என்பதால் பார்வதி கதாபாத்திரத்திற்கு நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் வந்த சிவராஜ் குமார் மற்றும் மோகன்லாலின் காட்சிகள் படத்தினை அதிரவிட்ட நிலையில் இவர்களின் கூட்டணி திரும்பவும் களம் இறங்குவது கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் பாகுபலி படத்தில் பிரபாஸின் மிரட்டலான நடிப்பு இப்படத்திலும் இவருக்கென்று தனி பெயரை சம்பாதித்து கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கொஞ்சம் விட்டா நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணிருவீங்க போல! ‘ரஜினி171’ பட திடீர் அறிவிப்புக்கான காரணம் இதோ

Next Story