எப்பா நீங்க நினைக்கிற மாறி இல்ல!.. லியோ படம் அப்படி இருக்காது.. ரூட்டை மாற்றிய லோகேஷ்..

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்த ஒரு வெற்றி இயக்குனர் தான் லோகேஷ். உதவியாளராக யாரிடமும் பணிபுரியாமல் தன் சொந்த முயற்சியால் இன்று இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எடுத்த 5 படங்களுமே சரியான ஹிட். அதுவும் இவரின் தரம் அந்த படத்தின் மூலமே நன்கு வெளிப்பட்டது. சரியான கதைகளம், தெளிவான ஸ்கீரின்ப்ளே என ஒரு தரமான படத்தை […]

By :  Rohini
Update: 2023-04-07 08:20 GMT

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்த ஒரு வெற்றி இயக்குனர் தான் லோகேஷ். உதவியாளராக யாரிடமும் பணிபுரியாமல் தன் சொந்த முயற்சியால் இன்று இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எடுத்த 5 படங்களுமே சரியான ஹிட். அதுவும் இவரின் தரம் அந்த படத்தின் மூலமே நன்கு வெளிப்பட்டது. சரியான கதைகளம், தெளிவான ஸ்கீரின்ப்ளே என ஒரு தரமான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்த அர்ப்பணிப்பான இயக்குனர் தான் லோகேஷ்.

தற்போது விஜயின் நடிப்பில் லியோ படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். ஏற்கெனவே விஜயுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இணைந்த லோகேஷ் அந்தப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இன்னும் உச்சக்கட்டமாக விக்ரம் படம் லோகேஷுக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இப்போது மீண்டும் விஜயுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவரின் படங்கள் பெரும்பாலும் நைட் மோடிலியே எடுக்கப்பட்டவையாக இருக்கும். கைதி, விக்ரம் போன்ற படங்களின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே சூட் செய்திருப்பார்.

அதனால் லியோ படமும் முக்கால் வாசி இரவு நேரத்தில் தான் படமாக்கப்படும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் லோகேஷ் இந்த படத்தில் 90 சதவீதம் பகல் காட்சியாக தான் எடுக்கப்போகிறாராம். மீதி 10 சதவீதம் தான் இரவுக் காட்சியாக படத்தில் இருக்குமாம்.

Tags:    

Similar News