படத்தை பாத்துட்டு சம்பளம் வேண்டாம்னு சொன்ன சூர்யா!.. இவரயா போட்டு அடிச்சீங்க!..

Actor suriya: நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து அஜித் விலகிவிட அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன். துவக்கத்தில் சில மொக்கை படங்களில் நடித்து தடுமாறினாலும் நந்தா, காக்க காக்க, பிதாமகன் என கவனிக்க வைக்கும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். பிதாமகன் படம் மூலம் தனக்கு நடிக்கவும் வரும் என நிரூபித்தார். அதன்பின் வாரணம் ஆயிரம், சிங்கம், அயன், சிங்கம் 2 என பல திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் […]

Update: 2023-11-10 00:50 GMT

Actor suriya: நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து அஜித் விலகிவிட அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன். துவக்கத்தில் சில மொக்கை படங்களில் நடித்து தடுமாறினாலும் நந்தா, காக்க காக்க, பிதாமகன் என கவனிக்க வைக்கும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

பிதாமகன் படம் மூலம் தனக்கு நடிக்கவும் வரும் என நிரூபித்தார். அதன்பின் வாரணம் ஆயிரம், சிங்கம், அயன், சிங்கம் 2 என பல திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் அகரம் பவுண்டேஷன் எனும் நிறுவனம் துவங்கி ஏழை மாணவ, மாணவிகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: எந்த நடிகரையும் வீட்டுக்கு சாப்பிட அழைக்காத சூர்யா! இவர் மட்டும் ஏன் ஸ்பெஷல்? யாருனு தெரியுமா?

மேலும், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு அப்படத்திலிருந்து வெறியேறிய சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் சுதா கொங்கராவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படமும் இவருக்காக காத்திருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் அஞ்சான். 2014ம் வருடம் வெளியான இந்த படத்தில் சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு செக் வைக்க அந்த படத்தை களத்தில் இறக்கும் சூர்யா குடும்பம்? பப்பு வேகுமா பாஸ்?..

ரஜினிக்கு பாட்ஷா போல சூர்யாவுக்கு இந்த படம் என லிங்குசாமி பில்டப் கொடுத்தார். ஆனால், இப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இந்த படத்தை கலாய்த்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். செய்தியாளர் சந்திப்பை நடத்தி ‘படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை பரப்ப வேண்டாம்’ என சூர்யாவே வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு போனது.

இப்படத்தால் லிங்குசாமிக்கு நஷ்டமும் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லிங்குசாமி ‘அஞ்சான் படம் சூர்யாவுக்கு பிடித்திருந்தது. அந்த படத்தின் அவரின் தோற்றமே புதுமையாக இருந்தது’ அவருக்கு 2 கோடி சம்பளம் பாக்கி இருந்தது. அந்த படம் சரியாக போகவில்லை என தெரிந்ததும் அந்த சம்பளத்தை கொடுக்க வேண்டாம் என சூர்யா சொல்லிவிட்டார்’ என லிங்குசாமி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: இது ஹிட் அடிக்காது!. விஜய் ரிஜெக்ட் பண்ணிய கதை!. ஆர்வமா நடித்து பல்பு வாங்கிய சூர்யா…

Tags:    

Similar News