தலைவர் 171!. சன் பிக்சர்ஸ் மீது செம கடுப்பில் லோகேஷ் கனகராஜ்!.. இப்படி பண்ணலாமா?!..

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து அதிரடி திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்தது இல்லை. வங்கியில் பணிபுரிந்து வந்த லோகேஷ் சினிமா ஆசை காரணமாக குறும்படங்களை இயக்கினார். அதன் பின்னர்தான் மாநகரம் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஒரு இரவில் நடிக்கும் கதையாக கைதியை எடுத்து ஆச்சர்யப்படுத்தினார். அடுத்து விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் வெற்றி பெற்றது. அப்போதுதான் கமல் […]

Update: 2023-09-12 06:05 GMT

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து அதிரடி திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்தது இல்லை. வங்கியில் பணிபுரிந்து வந்த லோகேஷ் சினிமா ஆசை காரணமாக குறும்படங்களை இயக்கினார்.

அதன் பின்னர்தான் மாநகரம் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஒரு இரவில் நடிக்கும் கதையாக கைதியை எடுத்து ஆச்சர்யப்படுத்தினார். அடுத்து விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் வெற்றி பெற்றது. அப்போதுதான் கமல் அவரை அழைத்தார். அப்படி உருவான திரைப்படம்தான் விக்ரம்.

இதையும் படிங்க: விஜய் பேரையே கெடுத்திருவார் போல! ஏன் அதையே பிடிச்சு தொங்குறீங்க? ஜேசனை விளாசும் பிரபலம்

இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்போது விஜயை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. விக்ரம் படத்திற்கு முன்பே லோகேஷ் ரஜினியை ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், அதை கமல்ஹாசன் தயாரிப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், அப்போது ரஜினி அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே, அந்த கதையை கொஞ்சம் மாற்றி கமலே நடித்த படம்தான் விக்ரம் என சொல்லப்பட்டது. அதன்பின் விக்ரம் சூப்பர் ஹிட் அடித்ததால் லோகேஷுக்கு டிமாண்ட் அதிகரித்துவிட்டது. எனவே, அவரின் இயக்கத்தில் நடிக்க ரஜினியும் ஓகே சொன்னார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: லியோ படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர்… என்ன ஜி இப்டியா பண்ணுவீங்க! கடுப்பான லோகேஷ்!

லோகேஷ் தன்னுடைய படங்களை ஒரு வீடியோ உருவாக்கி அதையே அறிவிப்பாக வெளியிட்டு ரசிகர்களை கவர்வார். விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு அப்படித்தான் வெளியிட்டார். ரஜினி படத்திற்கும் அப்படித்தான் அவர் திட்டமிட்டிருந்தாராம். ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் திடீரென நேற்று தலைவர் 171 படத்தை அறிவித்துவிட்டது.

முதல் நாள் இரவு அவரை தொடர்பு கொண்டு நாளை அறிவிக்கபோகிறோம் என சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறினார்களாம். இதனால், லோகேஷ் கனகராஜ் அப்செட்டில் இருக்கிறாராம். எப்படியெல்லாம் ரஜினி பட அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தோம் என புலம்பி வருகிறாராம்.

இதையும் படிங்க: நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்

Tags:    

Similar News