கையில் பெரிய வாளுடன் கீர்த்தி!! இன்னிக்கு எத்தன தல உருளப்போகுதோ

நடிகை மேனகாவின் மக்களும் நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்னர் 2013ல் கீதாஞ்சலி என்ற மலையாளப்படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின்மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் தனுஷுடன் தொடரி, சூர்யாவுடன் தானா […]

;

Published On 2021-12-02 03:05 IST   |   Updated On 2021-12-02 03:05:00 IST

நடிகை மேனகாவின் மக்களும் நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்னர் 2013ல் கீதாஞ்சலி என்ற மலையாளப்படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார்.

keerthi suresh

பின்னர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின்மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் தனுஷுடன் தொடரி, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரமுடன் சாமி 2 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது இவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் 'மரைக்கார்: அறப்பிக்கடலின் சிங்கம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

keerthi suresh

வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி. டத்தில் சிகப்பு சேலையில் ராணி வேடத்தில் இருக்கும் அவர் கையில் பெரிய வாளை பிடித்தவாறு உள்ளார். இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Tags:    

Similar News