சல்லி காசு தரமாட்டோம்!.. ஜேசன் சஞ்சயை லைக்கா டிக் செய்ததன் பின்னணி!.. அதான பாத்தோம்!...
விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் படத்துக்கு பின்னால் பல சுவாரஸ்ய தகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் லைகா இதில் மிகப்பெரிய ஒரு ரோலையே செய்து இருக்கிறது. அதன் விவரங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜேசன் சஞ்சய் முறையாக திரைப்பட கல்லூரியில் பயிற்சி எடுத்துவிட்டு சமீபத்தில் ஒரு குறும்படம் எடுத்தார். அந்த தகவலும் இணையத்தில் வெளியானது. இந்த நேரத்தில் தான் அதிரடியாக லைகா நிறுவனம் சஞ்சயினை இயக்குனராக அறிமுகப்படுத்தியது. இதையும் படிங்க: கோபத்தில் எட்டி உதைத்த […]
விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் படத்துக்கு பின்னால் பல சுவாரஸ்ய தகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் லைகா இதில் மிகப்பெரிய ஒரு ரோலையே செய்து இருக்கிறது. அதன் விவரங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜேசன் சஞ்சய் முறையாக திரைப்பட கல்லூரியில் பயிற்சி எடுத்துவிட்டு சமீபத்தில் ஒரு குறும்படம் எடுத்தார். அந்த தகவலும் இணையத்தில் வெளியானது. இந்த நேரத்தில் தான் அதிரடியாக லைகா நிறுவனம் சஞ்சயினை இயக்குனராக அறிமுகப்படுத்தியது.
இதையும் படிங்க: கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது ஏற்பட்ட மோதல் – இதுதான் நடந்ததா?
ஆனால் இயக்குனரான தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகரான அப்பா விஜயுமே அவர் பக்கத்தில் இல்லாமல் தனியாகவே கையெழுத்து போட்டார். விஜய் பேசவில்லை. எஸ்.ஏ.சியாவது அருகில் இருந்தால் அந்த விஷயம் இன்னமும் ஸ்பெஷலாக இருக்கும் எனக் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் லைகா சமீபத்தில் எடுத்த எந்த ஒரு சின்ன திரைப்படமும் சரியான வசூல் இல்லாத காரணத்தால் சமீபகாலமாக அறிமுக இயக்குனரை வைத்து எந்த படத்தினையும் லைகா தயாரிக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார்கள். ஆனால் ஜேசனை ஏன் டிக் செய்தனர் என பலரும் சந்தேகித்தனர்.
இதையும் படிங்க: கடைசியில பிஸ்கோத்து!.. ஜவான் படத்தில் விஜய் வருவாருன்னு பார்த்தா.. யாரு கேமியோ தெரியுமா?..
லண்டனில் மிகப்பெரிய பணக்காரரான அவரும் சுபாஸ்கரனும் நெருங்கிய நண்பர்கள். இயக்கத்தில் ரொம்பவே ஆர்வமாக இருந்த தன்னுடைய பேரனை வைத்து ஒரு படம் தயாரியுங்கள். செலவு எவ்வளவு ஆனாலும் அதை நான் பொறுப்பேற்று கொள்கிறேன் எனக் கேட்டாராம்.
அதை தொடர்ந்து அவரின் செலவில் ஜேசனின் இந்த படம் தயாராக இருக்கிறது. இதனால் தான் இந்த படத்தினை லைகா ஓகே செய்து இருக்கிறது. ஒரு பக்கம் நமக்கும் இதில் லாபம் மறுபக்கம் ப்ளாப் ஆனால் கூட நமக்கு எந்த பிரச்னை இல்லை என்ற அளவில் தான் லைகா இதை செய்கிறார்களாம்.