கதை கேட்கும் போதே புல்லரிக்குதே! சரத்குமாருக்காக ரஜினி சொன்ன கதை - புதுசா இருக்கே

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே என்று சொல்வதை போல் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தோடு வருடக்கணக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் சரத்குமார். இவருடையே டிராக்கே வேறு மாதிரியாக இருந்தது. குடும்பங்களை கவர்ந்த நடிகராக வலம் வந்தார் சரத்குமார். நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக போன்ற குடும்ப கதைகளை மையப்படுத்தி இருந்த கதைகளில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார். அதே நேரம் ஒரு ஸ்டண்ட் நடிகராகவும் படங்களில் தன்னை காட்டினார். கட்டுமஸ்தான உடல்வாகுவுடன் […]

By :  Rohini
Update: 2023-08-29 04:42 GMT

sarath

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே என்று சொல்வதை போல் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தோடு வருடக்கணக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் சரத்குமார். இவருடையே டிராக்கே வேறு மாதிரியாக இருந்தது. குடும்பங்களை கவர்ந்த நடிகராக வலம் வந்தார் சரத்குமார்.

நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக போன்ற குடும்ப கதைகளை மையப்படுத்தி இருந்த கதைகளில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார். அதே நேரம் ஒரு ஸ்டண்ட் நடிகராகவும் படங்களில் தன்னை காட்டினார்.

கட்டுமஸ்தான உடல்வாகுவுடன் சண்டை க் காட்சிகளில் இவர் நடிக்கும் ஒவ்வொரு சீனும் அனல் பறக்கும். ஒரு நீண்ட இடைவேளிக்கு பிறகு சரத்குமாரின் கதாபாத்திரம் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : ஏவிஎம் சரவணன் மட்டும் அத செய்யலைனா படம் ஊத்திருக்கும் – ‘ஜெமினி’ பட வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு போர்த்தொழில் படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சரத்குமாருக்கு வாரி வழங்கியது.

பிஸியான நடிகராக இப்போது வலம் வரும் சரத்குமார் ஒரு பேட்டியில் ரஜினியை பற்றிய சில சுவாரஸ்யங்களை பகிர்ந்தார். அதாவது காஞ்சனா படத்தை பார்த்த ரஜினி ஏன் இந்தப் படம் இவ்ளோ பெரிய வெற்றியை பதிவு செய்தது என யோசித்தாராம்.

அதன் பிறகு தான் தெரிந்ததாம் சரத்குமாரின் என்ரி அந்தப் படத்திற்கு பெரிய ஹைப்பை கொடுத்தது என்று. இதை சரத்குமாரிடம் ரஜினியே சொன்னாராம். அதுமட்டுமில்லாமல் சரத்குமாரை அழைத்து ஒரு கதையும் ரஜினி சொன்னாராம்.

சூப்பர் ஸ்டார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் நடிக்கும் என்று சொல்லியே அந்தப் படத்தின் கதையை சரத்குமாரிடம் சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தின் கதைப்படி ரஜினியும் சரத்குமாரும் போலீஸ் அதிகாரியாக வருவார்களாம். மேலும் இதை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும் ரஜினி சொல்லி எடுக்கலாம் என நினைத்திருக்கிறார்.

இதையும் படிங்க :இதனாலதான் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்கறது இல்ல!… இப்படிதான் தேர்வுகள் நடக்குமாம்!..

ஆனால் கால சூழ்நிலை இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Tags:    

Similar News